வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகின்றன. சிங்கங்கள் பெரும்பாலும் மற்ற விலங்குகளுடன் சண்டையிட்டு அவற்றை வேட்டையாடுகின்றன. எனினும், சில சமயங்களில் அவை தங்களுக்குள்ளும் சண்டையிடுகின்றன. 


தற்போதும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒரு ஆண் சிங்கமும் ஒரு பெண் சிங்கமும் தங்களுக்குள் பயங்கரமாக சண்டையிடுவதை காண முடிகின்றது. ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை சீண்டியவுடன், பெண் சிங்கம் பெரும் சீற்றத்துடன் ஆண் சிங்கத்தின் மீது பாய்ந்து வருகின்றது. இரு சிங்கங்களும் சண்டையிட்டாலும், பலமாக அடி வாங்குவது என்னவோ ஆண் சிங்கம்தான். 


மேலும் படிக்க | Viral Video: அநியாயம் பண்ணிய ஜோடி... போட்டுக்கொடுத்த சிங்கிள்ஸ்? - காதலன் பாவம்!


ஆண் சிங்கத்தை வெச்சி செஞ்ச பெண் சிங்கம்


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ஒன்றுடன் ஒன்று சண்டை போடுவதை காண முடிகிறது. முதலில் ஆண் சிங்கம் பெண் சிங்கத்தின் அருகில் சென்று அதை கிண்டல் செய்கிறது. இதனால் கோவம் கொண்ட பெண் சிங்கம், அதற்கு சரியான பதிலடி கொடுக்கிறது. இந்த வீடியோ பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.


சிங்கங்களின் சண்டை வீடியோவை இங்கே காணலாம்: 



ஆண் சிங்கம் மற்றும் பெண் சிங்கத்தின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது lionsdaily_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


மேலும் படிக்க | நினைச்சதை முடிக்காம விடமாட்டோம்! மரத்திலிருந்து பழம் பறிக்கும் சூப்பர் நாய்க்குட்டிகள் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ