Viral Video: அநியாயம் பண்ணிய ஜோடி... போட்டுக்கொடுத்த சிங்கிள்ஸ்? - காதலன் பாவம்!

Couples Viral Video: பைக்கில் காதல் ஜோடிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கிய நிலையில், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 8, 2023, 03:44 PM IST
  • இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
  • ராஜஸ்தான் வீடியோ வைரலாகி வருகிறது.
  • பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Viral Video: அநியாயம் பண்ணிய ஜோடி... போட்டுக்கொடுத்த சிங்கிள்ஸ்? - காதலன் பாவம்! title=

பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டால், கமிட்டான காதலர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என சமூக வலைதளங்களில் 'சிங்கிள்ஸ்' சமூகம் புலம்புவது இயல்புதான். ரோஜா தினம், பிரப்போஸல் தினம், முத்த தினம் சாக்லேட் தினம் என காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களின் கொண்டாட்டம் தினந்தினம் அவர்களுக்கு சோதனை தருவதாக உள்ளது. 

ஆனால், இந்த காதலர் சமூகம் பிப்ரவரி மாதம் மட்டுமில்லாமல் வருடம் முழுக்கவே பல அட்டூழியங்களையும், பொது இட விதிமுறைகளை மீறியும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது காதலை எதிர்க்கும் சமூகத்தில் இயல்புதான் என்றாலும், காதலர்கள் தரப்பிலும் பல பிரச்னைகள் இருப்பதை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களும் புகைப்படங்களும் உறுதிப்படுத்துகின்றன.

பேருந்தில் இருக்கை முதல் பழங்கால இடங்கள் வரை தங்களின் பெயர்களை எழுதிவைப்பது, வாகனங்களின் செல்லும்போது போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவற்றை செய்வதை காதலர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: குட்டிப் பையனுக்கு கண் திருஷ்டி கழிக்கும் பாட்டி! சுத்திப்போடும் வீடியோ வைரல்!

அதிலும், ஓடும் பைக்கிலும்/காரிலும் பிற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அமர்ந்து செல்வது தற்போது டிரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில், தற்போது, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருச்சக்கர வாகனத்தில், காதலனும், காதலியும் பிற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அமர்ந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

அஜ்மீர் நகரின் உள்ளூர் கல்லூரி சாலையில் இருந்து, நௌசர் பள்ளத்தாக்கு சாலையில், காதல் ஜோடிகள் கட்டிப்பிடித்தவாறு செல்கின்றனர். காதலன் பைக்கை ஓட்ட, காதலி எதிர்புறமாக அமர்ந்து, அவரை கட்டிப்பிடித்துச்செல்வது அந்த 5 விநாடி வீடியோவில் தெரிகிறது. மேலும், இச்சம்பவம், கடந்த திங்கட்கிழமை (பிப். 6) அன்று நடந்ததாக கூறப்படுகிறது. 

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு, வைரலான நிலையில், அஜ்மீர் கிறிஸ்டியன் கஞ்ச் காவல் துறையினர் வழக்கப்பதிவு செய்தனர். பைக் ஓட்டிச்சென்றவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயற்சி, அலட்சியமான செயல், பொது இடத்தில் ஆபாசமான செயலைச் செய்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரின் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

வாகனத்தை ஓட்டிச்சென்றவர், ஃபே சாகர் சாலையில் வசிக்கும் சாஹில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த மாத தொடக்கத்தில், லக்னோவில் ஒரு ஜோடி நவாப்ஸ் நகரில் பொது இடத்தில் அத்துமீறி நடப்பதை காண முடிந்தது. வைரலான அந்த வீடியோவில், ஒரு ஆண் - பெண் ஜோடி காரின் மேற்புறம் அமர்ந்து கட்டிப்பிடித்தவாறு சென்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | புடவையுடன் தாமிரபரணி ஆற்றில் டைவ் அடிக்கும் வீர தமிழச்சி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News