நினைச்சதை முடிக்காம விடமாட்டோம்! மரத்திலிருந்து பழம் பறிக்கும் சூப்பர் நாய்க்குட்டிகள் வீடியோ வைரல்

Fruit Plucking Dogs Viral: சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற நரியின் கதையை கேட்டிருக்கலாம். ஆனால், முயற்சி திருவினையாக்கும் என்பது தெரியும் தானே? முயற்சி செய்தா மரத்தில இருக்கிற பழம் இனிக்கும்! நாங்க நரியில்ல! நாய்க்குட்டீஸ்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 1, 2023, 09:30 AM IST
  • சீச்சீ இந்த பழம் புளிக்கும்! இது தப்பு பாஸ்
  • முயற்சி திருவினையாக்கும் தான் சரி
  • முயற்சி செய்தா மரத்தில இருக்கிற பழம் இனிக்கும்!
நினைச்சதை முடிக்காம விடமாட்டோம்! மரத்திலிருந்து பழம் பறிக்கும் சூப்பர் நாய்க்குட்டிகள் வீடியோ வைரல்

Dogs Viral Video: இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பதிவிடப்படும், பகிரப்படும் செய்திகள் நமக்கு பல விஷயங்களை வழங்குகின்றன. அதிலும் இங்கு பகிரப்படும் வீடியோக்கள் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் மட்டுமல்ல, நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வீடியோக்களால் மகிழ்ச்சி மட்டுமல்ல, பல படிப்பினைகளும் கிடைக்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. வீடியோக்களில் சில ரசனைக்குரிய வீடியோக்களாக மாறி சபாஷ் என சொல்ல வைக்கின்றன

சமூக ஊடகங்களில் வீடியோ 

இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களில், வித்தியாசமான வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. அதிலும் நாய், பூனை என் செல்லப்பிரணிகள் முதல், சிங்கம், புலி சிறுத்தை என விலங்குகளின் வீடியோக்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. இயல்பான வைரல் வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளமே உண்டு. ரசிகர் மன்றம் வைக்கவில்லை என்பதைத் தவிர, வீடியோக்களுக்கு வரும் கமெண்டுகள் ‘சும்மா அதிருதில்ல’ என்ற லெவலில் இருக்கின்றன.

மேலும் படிக்க | Lion Hunt Video: சிங்கங்களின் இரையாக மாறிய காட்டெருமை வீடியோ வைரல்

வித்தியாசமான வீடியோக்கள் என்றால், அவை விலங்குகளின் மோதல், காதல், பாம்பு, சிங்கம் என நாம் பார்க்கவே முடியாத வீடியோக்கள் மட்டும் தானா? இல்லை படிப்பினைகளை நமக்குக் கற்றுக் கொடுக்கும் வீடியோக்களும்  சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அதற்கு உதராணம் தான் ‘முயற்சியுடையான் இகழ்ச்சியடையான்’ என்பதை உணர்த்தும் நாய்க்குட்டிகளின் வீடியோ. 

இந்த வீடியோவில் இரு நாய்க்குட்டிகள், மரத்தில் காய்த்துத் தொங்கும் பழத்தை பறிக்க முயற்சிக்கின்றன. முயற்சியில் அவை வெற்றி பெற்றனவா? வீடியோவைப் பாருங்கள்...

இந்த வீடியோவைப் பார்த்தால், விடாமுயற்சி, வெற்றி தரும் என்பதை நாய்க்குட்டிகள் கற்றுக் கொடுக்கின்றன.  

மேலும் படிக்க | Viral Video: குட்டிப் பையனுக்கு கண் திருஷ்டி கழிக்கும் பாட்டி! சுத்திப்போடும் வீடியோ வைரல்!

தொடர்ந்து முயற்சிக்கும் நாய்க்குட்டிகள், மாறி மாறி மரத்தின் பழத்தை குறி வைத்து குதிக்கின்றன. இறுதியில் ஒரு நாய்க்கு பழம் கிடைக்க, அதை இரண்டும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு, வீடியோவுக்கு சுபம் போடுகின்றன.

தொடர்ந்து முயற்சித்தால், எட்டாக்கனியும் சிக்கும் என்பதை உணர்த்தும் வீடியோ இது.

மேலும் படிக்க | அமெரிக்காவுக்கே அம்மா! ஆனா இப்படி பண்ணலாமா சும்மா? மிசஸ் ஜோ பிடன் முத்த வீடியோ வைரல்

மேலும் படிக்க | இந்த கலர்ல மலைப்பாம்பா? சிறுமியிடம்....பதற வைக்கும் வீடியோ வைரல்

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News