வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


காட்டில் சில சமயம் சில விலங்குகள் காட்டு மன்னனான சிங்கத்தையும் பாடாய் படுத்துவதுண்டு. இவற்றை பார்த்து சிங்கமும் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது உண்டு. இதை காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. 


இந்த வீடியோவில், நீர்யானையை தாக்க முயற்சித்து பல்பு வாங்கும் சிங்கத்தை காண முடிகின்றது.  உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் சிங்கம் பின் வாங்கி ஓடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சிங்கத்திற்கு பாடம் கற்பித்த நீர்யானை 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் நீர்யானை நடமாடுவதைப் பார்த்து சிங்கம் அதை தாக்க முடிவு செய்து அதன் அருகில் செல்கிறது. நீர்யானையை தனது இரையாக்கும் எண்ணத்தில் சிங்கம் நீர்யானையை சீண்டுகிறது. 


மேலும் படிக்க | சிங்கத்தை சூழ்ந்த முதலை கூட்டம், வென்றது யார்? வைரல் வீடியோ 


ஆனால், பின்னர் நீர்யானை செய்த எதிர் தாக்குதலால் சிங்கம் திக்குமுக்காடிப் போகிறது. இரையென நினைத்த நீர்யானை எமனாகிப் போகும் என்ற அச்சத்தில் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிங்கம் ஓட்டம் பிடிக்கிறது. நீர்யானை தன் அகண்ட வாயை திறக்கும்போது சிங்கத்தை விழுங்கித்தான் விடுமோ என்று வீடியோவை காண்பவர்களுக்கும் தோன்றுகிறது. 


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. சமூக ஊடக பயனர்கள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 


சிங்கம் பல்பு வாங்கிய வீடியோவை இங்கே காணலாம்: 



காட்டில் நடந்த களேபரம் வீடியோவில் வைரல் ஆனது


சிங்கம் மற்றும் நீர்யானையின் சண்டையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Wild_lifeofficialandyawar_wildlife1 என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ மிகவும் பிரபலமாகி வருகிறது. 


இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் ஒன்றரை லட்சம் லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. இதற்கு கமெண்ட் செய்த ஒரு பயனர், “அந்த சிங்கம் நீர்யானையிடமிருந்து தப்பினால், அது இனிமேல் மற்ற விலங்குகளை வேட்டையாட துணியாது என்பது உறுதி” என்று எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | Leopard Crocodile Video: சீறும் சிறுத்தையை சிறைபிடித்த முதலை! இது முதலை அட்டாக்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR