சிங்கத்தை சூழ்ந்த முதலை கூட்டம், வென்றது யார்? வைரல் வீடியோ

Animals Video: சில விலங்குகள் சிங்கத்தையும் சீண்டிப்பார்க்கின்றன. காட்டு ராஜாவானாலும் சண்டையிட இவை அஞ்சுவதில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2022, 10:53 AM IST
  • காட்டு ராஜாவுடன் சண்டையிடும் முதலைகள்.
  • வைரலான வீடியோ.
  • கேமராவில் கைதான களேபரம்.
சிங்கத்தை சூழ்ந்த முதலை கூட்டம், வென்றது யார்? வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சில விலங்குகள் சிங்கத்தையும் சீண்டிப்பார்க்கின்றன. காட்டு ராஜாவானாலும் சண்டையிட இவை அஞ்சுவதில்லை. விளைவை பற்றி கவலைப்படாமல், சிங்கத்துடன் மோத தயாராகி விடுகின்றன. எருமை, கரடி, யானை போன்ற விலங்குகள் சிங்கங்களுடன் சண்டையிடுவதை நாம் பார்த்துள்ளோம். 

ஆனால் பெரும்பாலும் நீரிலேயே இருக்கும் முதலை சிங்கத்துடன் மோதுவதைப் பார்ப்பது மிக அரிது. தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், காட்டின் ராஜாவான சிங்கத்துடன் முதலை ஒன்று சண்டையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தண்ணீர் குடிக்கச் சென்ற சிங்கம் ஒரு முதலைக் கூட்டத்தை எதிர்கொள்கிறது. அதனால் அங்கு ஒரு மோசமான சூழல் உருவாகிறது. 

முதலைகள் சிங்கத்துடன் மோதுகின்றன

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், சிங்கம் முதலில் ஆற்றில் தண்ணீர் குடிக்கச் செல்வதை காண முடிகின்றது. ஆனால் அங்குள்ள காட்சியை பார்த்து சற்று அரண்டுவிடுகிறது. 

ஏனெனில் ஆற்றில் ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 10 முதலைகள் கொண்ட கூட்டமே தண்ணீரில் காணப்படுகின்றன. ஆனால், இதற்கெல்லாம் சிங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. அது பின்வாங்காமல் முதலையைத் தாக்க முயல்கிறது. அப்போது பல முதலைகள் சேர்ந்து சிங்கத்துக்கு பதிலடி கொடுக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ரயில் முன் குதித்த சிறுவனை பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்! வைரல் வீடியோ! 

சிங்கத்துக்கும் முதலைகளுக்கும் நடக்கும் சண்டையை காட்டும் அந்த வைரல் வீடியோ இதோ

காட்டு வீடியோ வைரலானது

சிங்கம் மற்றும் முதலையின் இந்த வீடியோ, wild_animal_shorts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. 10 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

'பயங்கர சண்டை. தண்ணீரில் ரத்தத்தின் நிறத்தில் மாறவுள்ளது.’ என ஒருவர் கமெண்ட் பாக்ஸில் எழுதியுள்ளார். இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாம்பு வாலை பிடித்து விளையாடும் சிறுவன், நடுங்க வைக்கும் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News