காற்றில் பறக்கும் காகித ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ

காகிதத்தில் தத்தரூபமாக செய்யப்பட்ட ஸ்பைடர்மேட் வீடியோ வானளாவிய உயரத்தில் பறக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 25, 2022, 04:07 PM IST
  • காற்றில் பறக்கும் காகித ஸ்பைடர்மேன்
  • டிவிட்டர் பக்கத்தில் வைரல்
  • 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்
காற்றில் பறக்கும் காகித ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ title=

ஹாலிவுட் உலகில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் ஹிட் அடித்து உலகளவில் டிரெண்டான திரைப்படம் ஸ்பைடர்மேன். இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டப்பட்டது. அனைத்து மொழிகளிலும் கலெக்ஷனில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்த இந்த திரைப்படத்துக்கு குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர். 

மேலும் படிக்க | சிங்கத்தை சூழ்ந்த முதலை கூட்டம், வென்றது யார்? வைரல் வீடியோ

அந்தளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்பைடர்மேன், இப்போதும் மீண்டும் வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.சினிமா படத்திற்காக அல்ல, படத்தில் வருவதுபோல் காகிதத்தில் செய்யப்பட்ட பொம்மை ஸ்பைடர்மேன். நேச்சர் & அமேசிங் என்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோவில், காகிதத்தில் செய்யப்பட்ட பொம்மை ஸ்பைடர்மேன் வானளாவிய உயரத்தில் பறக்கிறது. காற்றில் மிதந்து பறக்கும் இந்த பொம்மை ஸ்பைடர்மேன் காண்போரை வியக்க வைக்கிறது.  

டிவிட்டரில் மட்டும் இதுவரை சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன் ஒருவர், பொம்மை ஸ்பைடர்மேன் வானாளவிய உயரத்தில் பறப்பது என்பது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வெயிட் இல்லாததால் அவ்வளவு உயரத்தில் பறப்பது என்பது சாத்தியம் எனத் தெரிவித்துள்ள அவர், ஆனால் கரெக்டாக கீழிறங்குவது எப்படி? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க | ரயில் முன் குதித்த சிறுவனை பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்! வைரல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News