வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு நாள்தொறும் பலவித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்து நாம் நமது கவலைகளை மறந்து வேறு உலகுக்கு சென்று விடுகிறோம். உலகின் பல மூலைகளில் நடக்கும் சுவாரசியமான, சுவையான, வித்தியாசமான, விசித்திரமான நிகழ்வுகளை நாம் தினமும் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். இணையத்தில் நடனங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்புவதுண்டு. பல பயனர்கள் தங்கள் அசத்தலான நடனங்களின் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு வைரல் ஆடியோ கோமி கோமி பற்றி நன்றாக தெரிந்திருக்கும். இந்த ஆடியோவில் இதுவரை பல வீடியோக்கள் வந்துள்ளன. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சிறுமியின் வீடியோ மிகவும் ஸ்வீட்டாகவும் கியூட்டாகவும் உள்ளது. 


கோமி கோமி வைரல் ஆடியோவிற்கு டெல்லி மெட்ரோவில் ஒரு சிறுமி ஆடும் நடனம் வீடியோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ரயிலுக்குள் ஒரு அழகான சிறுமி நடனமாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. வீடியோ துவங்கியவுடன், அழகான ஒரு சிறுமியை கேமராவில் காண்கிறோம். அவர் நடனமாடத் தொடங்குகிறார். வீடியோவில், சிறுமியின் பின்னால் ஒரு நண்பர்கள் குழுவும் இருப்பது தெரிகிறது. அதில் உள்ள ஒரு இளைஞனும் சிறிமி ஆடுவதைப் போலவே ஆடுகிறார். 


மேலும் படிக்க | சுட்டிக் குழந்தையின் பாம்பு விளையாட்டு! பார்த்தாலே பகீர் என பயப்படுத்தும் வீடியோ 


ஸ்வீட் சிறுமியின் கியூட் வீடியோவை இங்கே காணலாம்: 


 



டான்ஸ் ஆடிய இளைஞனும் கமெண்ட் செய்துள்ளார்


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்த வீடியோவில் சிறுமியின் பின்னால் நடனமாடும் இளைஞனும், இணையத்தில் இந்த வீடியோவை தேடி, இதற்கு கமெண்ட் செய்துள்ளார். 


‘என்னை வீடியோவில் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி. யாரும் என்னை டேக் செய்யவில்லை. ஆனாலும், பரவாயில்லை’ என அவர் எழுதியுள்ளார். இந்த கமெண்டிற்கு பிறகு அவர் இந்த போஸ்டில் பின் செய்யப்பட்டார். 


சமைரா குருங் அல்லது முமு என்ற இந்த சிறுமிக்காக உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள். வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. சிறுமியின் கியூட் நடன அசைவுகளை பாராட்டி இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | 'அட கெரகமே!!’: பெண்ணிடம் பல்பு வாங்கிய முதலை, கலாய்க்கும் இணையவாசிகள், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ