இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். அதிலும் விலங்களுக்கு இடையிலான அன்பு பல சமயங்களில் இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுகிறது. இனம் இனத்தோடு தான் சேரும் என்கிற பழமொழியை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் விலங்குகள் அந்த பாரபட்சமின்றி மற்ற விலங்குகளையும் அரவணைத்து கொள்ளும் உயரிய பண்புகளை கொண்டிருக்கிறது என்பதை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நிரூபித்துள்ளது. நாய் ஒன்று சுமார் ஒரு வருட காலத்திற்கு பிறகு தனது நண்பனான பூனையை கண்டவுடன், வாயில்லா அந்த ஜீவன்கள் அனபை பரிமாறிக் கொண்ட விதம் இணையத்தை அழ வைத்து விட்டது எனலாம்.
அவை பாசமுடன் அரவணைத்து வைத்துக்கொள்ளும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிகவும் வைரல் ஆகிய இந்த வீடியோவில், நாய் சந்தோஷம் மிகுதியினால், பூனையை நோக்கி ஓடுவதையும், அதனை பாசத்துடன் நாக்கினால் தடவிக் கொடுப்பதையும் காணலாம்.
மேலும் படிக்க | Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:
வைரலாகும் வீடியோவில் நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த நிலையில், அவை இரண்டு வீட்டிற்குள் சந்தோஷமாக வலம் வருவதைக் காணலாம். இதுபோன்ற பல விலங்குகள் செய்யும் செயல்கள் மனிதர்களுக்கு ஒரு சிறந்த பாடத்தை கற்பிக்கும் விதமாக அமைகிறது என்றால் மிகையில்லை.
மேலும் படிக்க | Viral Video: தாய் - மகள் ஜோடியின் அற்புத நடனம்; பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ