`மண்ணுல விளையாடாதனா கேட்டயா’: ஷாம்பூ போட்டு பாம்பை குளிப்பாட்டும் நபர், வைரல் வீடியோ
Rare Snake Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. மிக அரிய காட்சியை கொண்ட வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
பாம்பின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. பாம்பு, தேள் போன்ற உயிரினங்களின் பெயர்களைக் கேட்டாலே நாம் அச்சப்படுவதுண்டு. இவற்றிடம் சிக்கிக்கொள்ளாமல் தூரமாக சென்றுவிடவே நாம் முயற்சிக்கிறோம். ஆனால், பாம்பை தொடுவது மட்டுமல்லாமல், அதற்கு ஷாம்பு போட்டு ஒருவர் குளிப்பாட்டுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒருவர் செய்துள்ளார். அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்ரது.
இந்த வீடியோவில், ஒருவர் தனது கைகளால் சிறு குழந்தையை குளிப்பாட்டுவது போல பாம்புக்கு ஷாம்பூ போட்டு குளிப்பாட்டுவதை காண முடிகின்றது. இது மிகவும் அசாதாரணமாக தெரிகிறது.
மேலும் படிக்க | குரங்குகளுக்கு விருந்து வைத்த நபர்: பாராட்டும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ
ஷாம்பு போட்டு குளித்த ராஜா நாகம்
சிலர் மிருகங்களை குளிப்பாட்டுவதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆனால், 10 அடிக்கு மேல் நீளமுள்ள ஆபத்தான பாம்பு ஒன்றுக்கு ஒரு நபர் ஷாம்பு போட்டு குளிப்பாட்டுவதை நாம் யாரும் பார்த்திருக்க முடியாது. இந்த வீடியோவில் அந்த நபர், ஒரு குழந்தையை பார்த்து பார்த்து குளிக்க வைப்பது போல, நாகப்பாம்பையும் மிக ஆசையுடன் குளிக்கச்செய்கிறார். அவரிடம் அச்சத்தின் சுவடையே காண முடியவில்லை. அவர் மிக சாதாரணமாக இந்த வேலையை செய்வதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
பாம்பை குளிப்பாட்டும் நபரின் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோவை funtaap என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்கள் கிடைத்துள்ளன. இதுவரை ஆயிரக்கணக்கானோர் இதை லைக் செய்துள்ளனர். இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர் அந்த நபர் கூறுவது போல, ‘மீண்டும் மண்ணில் விளையாடினால்.. அடித்துவிடுவேன்’ என கமெண்ட் செய்துள்ளார். ‘இவருக்கு துணிச்சல் கொஞ்சம் அதிகம்தான்’ என மற்றொருவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | தில்லிருந்தா வாடா நீயா நானா பாத்துக்கலாம்..ஆட்டுடன் மோதும் சேவல்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ