கேரளாவில் செண்டை மேளம் வாசிப்பது மிகவும் பிரசித்தமானது. இந்நிலையில், கேரளாவில் மணப்பெண் செண்டை மேளம் வாசித்தபடி மாஸ் எண்ட்ரி கொடுக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த மணமகளின் பெயர் ஷில்பா, அவரது தந்தை தொழிலில் செண்டை மேளம் மாஸ்டர். அவர் கண்ணூரில் (கேரளா) வசிப்பவர். சிறுமியும் செண்டை மேளம் வாசிப்பதில் வல்லவர். அதனால் தான் அவர் திருமணத்தில் செண்டை மேளம் வாசிக்க எண்ட்ரி கொடுத்த அந்த வீடியோ வைரலானது. ஞாயிற்றுக்கிழமை ராஜவல்சம் ஆடிட்டோரியத்தில் தேவானந்த் என்ற இளைஞரை ஷில்பா திருமணம் செய்துகொண்டார்.
இந்த வீடியோ டிசம்பர் 26 அன்று @LHBCoach என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது. அதில் அவர், ‘ இன்று குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது. மணப்பெண்ணின் தந்தை செண்டை மேளம் மாஸ்டர். தன் தந்தையுடன் மகள் ஆர்வத்துடன் இசைக்கருவியை வாசிக்கிறாள். நிச்சயமாக, மணமகனும் இதில் சேருவதைக் காணலாம். இது வரை 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. பல பயனர்கள் மணமகளின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளனர்.
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
A marriage function in guruvayoor temple today. The brides dad is Chendai master and the daughter plays it enthusiastically with her dad also joining at the end. The groom also seems to be participating. pic.twitter.com/VgoQbIhwhh
— BRC-SBC (@LHBCoach) December 26, 2022
செண்டை மேளம் என்றால் என்ன?
செண்டை மேளம் என்பது மரத்தால் செய்யப்பட்ட ஒரு வெற்று உருளை வடிவ மேளம் ஆகும், அதன் இரு பக்கங்களும் அடர்த்தியான தோல்களால் மூடப்பட்டிருக்கும், அவை அடர்த்தியான நெகிழ்வான தோல் சுழல்களுடன் முனைகளில் கட்டப்பட்டிருக்கும். இது இடுப்புக்கு கீழே தொங்கவிடப்பட்டு, இரண்டு வளைந்த மரக் குச்சிகளைக் கொண்டு இசைக்கப்படுகிறது. இது கேரளாவின் கதகளி நடன வடிவத்திற்கு இன்றியமையாத துணையாக உள்ள இசைக் கருவியாகும். இது மட்டுமின்றி, கோவில் சடங்குகள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்வுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ