யாருடா இங்க காட்டுக்கு ராஜா - மாஸ் காட்டிய யானைகள்... தெறித்து ஓடும் சிங்கங்கள்!

Elephant vs Lion Viral Video : பொதுவாக, சிங்கங்கள் காட்டுக்கு ராஜா என எண்ணப்படும் நிலையில், இந்த வைரல் வீடியோவை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 28, 2022, 07:27 AM IST
  • இது ட்விட்டர் வைரலாகி வருகிறது.
  • மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
  • 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது.
யாருடா இங்க காட்டுக்கு ராஜா - மாஸ் காட்டிய யானைகள்... தெறித்து ஓடும் சிங்கங்கள்!  title=

Elephant vs Lion Viral Video : விலங்குகள் குறித்த வீடியோ என்றாலே அனைவரின் கவனமும் அதில் குவிந்துவிடும். அதிலும் வனவிலங்குகள் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு வனவிலங்குகளின் செயல்களை மக்கள் விரும்பி ரசிக்கின்றனர். 

விரும்பத்தகாத செயல்களையும் விலங்குகள் செய்தாலும் அவை பெரிதும் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால், மக்களின் பொது எண்ணவோட்டத்திற்கு எதிராக விலங்குகள் நடந்துகொள்ளும்போது, ஆச்சரியத்தைதான் வரவழைக்கிறது. அதுபோன்று இங்கே, காட்டிற்கே ராஜா, கம்பீரமான விலங்கு என பொதுவாக அறியப்படும் சிங்கங்கள், யானைக்கூட்டத்தை கண்ட உடன் அலறி தெறித்து ஓடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | கூண்டுக்குள் வந்து சீன் போட்ட நபர்: வெச்சி செஞ்ச சிங்கங்கள், கதிகலங்க வைக்கும் வைரல் வீடியோ

இணையத்தில் சமீபத்தில் இந்த வீடியோ பரவி வரும் நிலையில், லேன்ஸ் என்ற ட்விட்டர் பயனர் நேற்று முன்தினம் (டிச. 26) பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை  குவித்துள்ளது. 

அதாவது, காட்டில் ஆண் சிங்கம், பெண் சிங்கங்கள் மற்றும் சிங்கக்குருளைகள் (சிங்கக்குட்டி) கூட்டமாக அமர்ந்திருக்கின்றன. அப்போது, திடீரென முதலில் சிங்கக்குட்டி ஒன்று அலறி அடித்து ஓடுகிறது. அது ஏன் ஓடுகிறது என கவனித்த பெண் சிங்கங்களும், அடுத்த சில நொடிகளில் இடத்தை காலி செய்து ஓடுகின்றன. சிங்கக்கூட்டத்தை விட்டு தள்ளியிருக்கும் ஆண் சிங்கம் ஒன்றும் அதிவேகத்தில் ஓடுகிறது. 

ஆனால், கடைசியாக ஒரு ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் நின்று வலது பக்கமாக திரும்பி பார்த்து சற்று காத்திருக்கின்றன. ஆனால், ஆபத்து நெருங்குவதை கண்டு அவையும் ஓட்டம் பிடித்தன. தற்போது, சிங்கங்கள் இருந்த அதே இடத்தில், யானைகள் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டின. இந்த வீடியோதான் தற்போது அதிகமாக பரவிவருகிறது. 

இந்த வீடியோவை பதிவிட்ட லேன்ஸ்,"எது ஒரு சிங்கக்கூட்டத்தை இப்பிடி அலறி அடித்து ஓட வைக்கிறது? என முதலில் யோசித்தேன்" என்றும், இந்த வீடியோ தனக்கு சிரிப்பை வரவழைப்பதாகவும் கூறியிருந்தார். இதைக் கண்ட பலரும் காட்டின் உண்மையான ராஜா, யானைதான் என அவற்றுக்கு முடிசூடி வருகின்றனர். 

சில நாள்களுக்கு முன்பாக, சிங்கம் ஒன்று காட்டெருமையை வேட்டையாடி தனது குடும்பத்திற்கு படையலிட, அதனை வாயில் கவ்விய படி கம்பிரமாக நடந்து வந்த வீடியோ ஒன்று வைரலானது. அப்போது, காட்டின் ராஜா சிங்கம்தான் என்று உறுதியாகிவிட்டது எனவும் பலர் தெரிவித்து வந்தனர். அதன்படி, காடுகள் மனித விதிகளுக்கு அப்பாற்பட்டு, தனி வாழ்க்கைமுறை கொண்டிருக்கிறது என்பதனையும் இந்த இரு வைரல் வீடியோக்களும் நமக்கு கூறுகின்றன. 

இதையும் படிக்க | நண்பனை காப்பாற்ற மலைப்பாம்புடன் நேருக்கு நேர் மோதிய கங்காரு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News