வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவில் குரங்குகள் காடுகள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்வது மட்டுமல்லாமல், இவற்றுக்கு மத ரீதியான முக்கியத்துவமும் உள்ளது. குரங்குகள் மனிதர்களை நகலெடுப்பதில் திறன் வாய்ந்தவை. இவை பெரும்பாலும் பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை உட்கொள்கின்றன. பல கோவில்களுக்கு அருகிலும், பிற இடங்களிலும் பலர் குரங்குகளுக்கு பழங்களையும் அவற்றுக்கு பிடித்தமான பிற உணவுகளையும் அளிப்பதை நாம் அவ்வப்போது பார்த்துள்ளோம். சமூக ஊடகங்களிலும் குரங்குகள் பற்றிய பல வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன.
தற்போதும் குரங்குகள் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பல குரங்குகள் அடங்கிய ஒரு குரங்கு கூட்டத்துக்கு ஒரு நபர் உணவளிப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தேதி குறிப்பிடப்படாத வீடியோவில், ஒரு நபர் தனது நான்கு சக்கர வாகனத்தின் பின்புறம் முழுவதும் வாழைப்பழங்கள் மற்றும் அவல் பொரி போல் காணப்படும் உணவுப் பொருளைக் கொண்டு வருகிறார். அவர் கதவைத் திறந்த உடனேயே குரங்குகள் வாழைப்பழங்களின் மேல் பாய்ந்து அவற்றை உண்ணத் தொடங்குகின்றன.
மேலும் படிக்க | தில்லிருந்தா வாடா நீயா நானா பாத்துக்கலாம்..ஆட்டுடன் மோதும் சேவல்: வீடியோ வைரல்
— Best of the Best (@bestofallll) December 26, 2022
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண் மூலம் கார் குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது. @bestofallll என்ற ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. இது டிசம்பர் 26 அன்று வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை ட்விட்டரில் 77,000 வியூஸ்களைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் பயனர் ஒருவர், “விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்... தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்ட பிறகு இவை சென்றுவிட்டன.. இன்னும் வேண்டும் என்ற பேராசை விலங்குகளுக்கு இல்லை” என்று எழுதியுள்ளார்.
“இதைப் பார்த்தால் நான் என் பிறந்தநாளில் என் நண்பர்களுக்கு பார்டி கொடுப்பது போல உள்ளது” என்று மற்றொருவர் கேலியாக கமெண்ட் செய்துள்ளார்.
ஜூன் மாதம், உத்தரபிரதேச காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மாம்பழத்தை வெட்டி அதில் இருந்து ஒரு துண்டை குரங்குக்கு கொடுப்பது போன்ற வீடியோ வைரலாக பரவியது. பலர் இந்த சைகையைப் பாராட்டினாலும், சிலர் மனிதர்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர். இப்போது இந்த வீடியோவுக்கும் பல வித கமெண்டுகள் வந்துகொண்டு இருக்கின்றன.
மேலும் படிக்க | கொஞ்ச விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ