Viral Video of Mumbai Man: மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தனது பிறந்தநாளில் கேக் வெட்டியே வினோத வீடியோ வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு நபருக்கும் அவர்களது பிறந்த நாள் என்பது ஒரு சிறப்பு தினமாகும். இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாட விரும்புகிறார்கள். அதன்படி தற்போது மும்பையை சேர்ந்த நபர், தனது பிறந்தநாளில் கேக் வெட்டியே சோர்ந்து போகும் அளவுக்கு 550 கேக்குகளை வெட்டியுள்ளார். 


550 கேக்குகளை வெட்டுவது மட்டுமில்லாமல் இந்த செயலை செய்ய அவர் மும்பையின் காந்திவலி மேற்கு ரயில் நிலையத்தைத் தேர்ந்தெடுத்தார். 550 கேக்குகளை வெட்டி (Social Media) பிறந்தநாளைக் கொண்டாடுவது உண்மையிலேயே தனித்துவமான அனுபவமாக இருக்கும். 


ALSO READ | Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ


ALSO READ | Viral Rescue: காப்பாற்றுவது நல்லதுதான்; ஆனால் அது நாகபாம்பாக இருந்தால்?


சூர்யா ரதுரி என்ற இந்த நபர் தனது பிறந்தநாளை ரயில் நிலையத்தில் 550 கேக்குகளை வெட்டி கொண்டாடினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ தொடர்பாக மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்த வீடியோவில் அவருடன் பலர் காணப்படுகிறார்கள். இதனால் அவர் கொரோனா விதிகளை மீறி இந்த செயலை செய்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் தற்போது உள்ளூர் மக்கள், மும்பை காவல்துறை மற்றும் மும்பை மாநகராட்சியிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவலின் விகிதம் இன்னுமும் பதிவாகி வரும் நிலையில் இது போன்ற செயல் கண்டிக்கத்தக்கது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR