ராஜ நாகப்பாம்பு தொடர்பான இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல  கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.


மேலும் படிக்க | அடேங்கப்பா... பலாபழத்தை எடுக்க பலே முயற்சி - யானை வைரல் வீடியோ


சமீபத்திலும் ஒரு 12 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இந்த கருநாகம் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு ஆகும்.  பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. அதன்படி இப்போது வைரலாகும் வீடியோவில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பின் தலையில் ஒருவர் முத்தமிடும் வினோத வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


12-அடி நீளமுள்ள அரச நாகப்பாம்பு தலையில் முத்தமிடும் நபரின் வைரல் வீடியோ



இப்படிப்பட்ட காட்சிகள் மிக அரிதானவை. அத்தனை சுலபமாக இவற்றை காண முடியாது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், பல பயனர்கள் இதை ஒரு அதிர்ச்சி வீடியோ என்று கூறி வருகின்றனர்.


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | இது உனக்கு தேவையா.. முள்ளம்பன்றியை விழுங்கி அவதிப்பட்ட ராட்சத பாம்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ