இது உனக்கு தேவையா.. முள்ளம்பன்றியை விழுங்கி அவதிப்பட்ட ராட்சத பாம்பு: வீடியோ வைரல்

பெயரைக் கேட்டாலே கிடுகிடுக்க வைக்கும் பாம்பிற்கு ஒரு முள்ளம்பன்றி சவால் விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இறுதி வரை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 15, 2023, 09:59 AM IST
  • முள்ளம் பன்றி பார்ப்பதற்கு சிறிய விலங்காக இருந்தாலும் அதை வேட்டையாடுவது என்பதும் மிகவும் கடினமானது.
  • வேட்டை விலங்குகளும் முள்ளம்பன்றியை வேட்டையாடுவது கடினம்தான்.
இது உனக்கு தேவையா.. முள்ளம்பன்றியை விழுங்கி அவதிப்பட்ட ராட்சத பாம்பு: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல  கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

மேலும் படிக்க | எட்டி எட்டி உதைத்தவரை கடித்து தரதரவென இழுத்துச் சென்ற கழுதை: வைரல் வீடியோ

சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. ஆனால் இது வழக்கமாக பகிரப்படும் வீடியோக்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. இதில் பாம்பிற்கு ஒரு முள்ளம்பன்றி சவால் விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இறுதி வரை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.

இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் அதற்கான தற்காப்பு தகவைப்புடன்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, பாம்புகள் விஷத்துடன் படைக்கப்பட்டுள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் வேட்டையாடுவதற்கு ஏற்றபடி வலிமை, கூர்மையான நகம், பற்கள் என்ற உடலமைப்புடன் உள்ளன. தங்களின் சிறப்பு உடலமைப்பு, சிறப்பு தன்மைகளைக்கொண்டு அந்தந்த விலங்குகள் தன்னை தற்காத்துக்கொண்டு உயிர் வாழ்கின்றன.

அந்த வரிசையில், முள்ளம் பன்றி பார்ப்பதற்கு சிறிய விலங்காக இருந்தாலும் அதை வேட்டையாடுவது என்பதும் மிகவும் கடினமானது. வேட்டைக்காரர்கள் மட்டுமல்ல வேட்டை விலங்குகளும் முள்ளம்பன்றியை வேட்டையாடுவது கடினம்தான். அந்தபடி கொடூர பாம்பு ஒன்று முள்ளம் பன்றியை வெற்றிகரமாக வேட்டையாடி விழுங்கும் காட்சியை இந்த வைரல் வீடியோவில் நீங்கள் காணலாம். ஆனால் இறுதியாக ஜீரணிக்க முடியாமல் அந்த பாம்பு அவதிப்படும் காட்சியையும் இந்த வீடியோ காணலாம். அதன் முதுகிலும் பின்புறத்திலும் முள்போன்ற அமைப்பின் காரணத்தால், பாம்பு அதை விழுங்க முடியாமல் சிக்கிக் கொள்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பு மற்றும் முள்ளம்பன்றியின் வீடியோவை இங்கே காணுங்கள்: 

இப்படிப்பட்ட காட்சிகள் மிக அரிதானவை. அத்தனை சுலபமாக இவற்றை காண முடியாது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், பல பயனர்கள் இதை ஒரு அதிர்ச்சி வீடியோ என்று கூறி வருகின்றனர்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | திடீரென தாக்கிய இறந்த முதலை, அரண்ட மக்கள்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News