சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் சேட்டைகள், குறும்புகள் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலங்களில் இவை பட்டையை கிளப்பி வருகின்றன. நாம் அருகில் நின்று காண முடியாத சில அரிய காட்சிகளை இந்த வீடியோக்களில் காணலாம். அந்த வகையில் தற்போது மான்கள் ஏரியில் தண்ணீர் அருந்தும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அற்புதமான மலைகள், ஏரிகள் மற்றும் அழகான கிராமங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள பல அழகான இடங்களைப் போலவே, சுவிட்சர்லாந்தின் நீலத்தில் தண்ணீரை கொண்ட அழகான ஏரிகளையும், அழகிய இயற்கை வளங்களையும் சிறப்பாக அனுபவிக்கும் ஒரு மான் கூட்டம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டது.

மிகவும் அரிதான காட்சிகளை கொண்ட, வேடிக்கையான விலங்குகளின் வீடியோக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளும் 'Buitengebieden' என்ற டிவிட்டர் பக்கத்தால் இந்த வீடியொ பகிரப்பட்டது, அதில், "மான்கள் சுவிட்சர்லாந்தின் ப்ரியன்ஸ் ஏரியின் தெளிவான நீரை அனுபவிக்கின்றன" என பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் காணப்படும் மெய்சிலிர்க்க வைக்கும் இடம் சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மாகாணத்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்கு வடக்கே உள்ள ஏரி பிரைன்ஸ் ஏரி என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் உள்ள பிரைன்ஸ் ஏரியில் இருந்து மான் கூட்டம் குடித்து வரும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

அழகான நீல நிறத்தில் தோன்றும் ஏரியில், மான் கூட்டம் அமைதியான முறையில் ஏரியில் இருந்து தண்ணீரை குடிப்பதை வீடியோ காட்டுகிறது. செழிப்பான காடு, பிரகாசமான பச்சை புல் மற்றும் மான்களின் கூட்டம் ஆகியவை கண்களுக்கு வ்ருந்து படைக்கின்றன. ஏரியின்ன் தெளிவான நீல நிறத்தில் தோன்றும் நீர் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இந்த வீடியோ 1.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 98k லைக்குகளுடன் வைரலாகியுள்ளது. பெரும்பாலான நெட்டிசன்கள் தாங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது இந்த இடத்திற்கு டெலிபோர்ட் செய்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: யானையின் ‘Cat Walk’; இணையவாசிகளை சொக்க வைத்த ஒய்யார நடை!

மேலும் படிக்க | ‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 