வைரல் வீடியோ:  இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இணையத்தில், பாம்பு, சிங்கம், குரங்கு, யானை ஆகிய விலங்குகளுக்கு அதிக மவுசு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளில் மிகவும் குறும்புத்தனமானவை குரங்குகள், லங்கூர்கள் மற்றும் சிம்பன்சிகள். இவற்றின் குறும்புத்தனம் காண்பவர்களை வியக்கும் வகையில் இருக்கும். வழியில் நடந்து செல்பவர்கள் கையிலிருக்கும் பொருட்களை பிடிங்கிச்செல்வதில் இவற்றுக்கு அலாதி பிரியம் உண்டு. பிடுங்கிப் போனால் பரவாயில்லை!! சில சமயம் சிலரை அடித்துவிட்டும் போய்விடும் இந்த வால் குரங்குகள்!! 


தற்போது குரங்குகளின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நபரின் பையிலிருந்து எதையோ குரங்கு திருட முயற்சி செய்வதையும், அதில் அது வெற்றி பெறுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 


ஆப்பிளை திருடிய குரங்கு 


காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோவில், இரண்டு குரங்குகள் ஒரு நபரை ஏமாற்றி அவரது பைக்கு பின்னால் ஒளிந்து கொள்வதை காண முடிகின்றது. அதன் பிறகு, மெதுவாக அந்த நபரின் பையை திறந்து அதில் ஏதாவது உள்ளதா என தேடத் துவங்குகின்றன. பயங்கர தேடலுக்குப் பிறகு ஒரு குரங்குக்கு ஒரு ஆப்பிள் கிடைக்கிறது. அதைக் கண்டவுடன் படுகுஷியான குரங்கு மகிழ்ந்து அங்கிருந்து ஓடுகிறது. பின்னர் இரண்டு குரங்குகளும் சேர்ந்து ஆப்பிள்களை சாப்பிடுகின்றன. 


மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ 


கில்லாடி குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்தக் குரங்கு எவ்வளவு பெரிய கில்லாடி திருடன் என்பதை இந்த வீடியோவின் காட்சியை வைத்து யூகிக்க முடிகிறது. இந்த வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ