சுட்டிக் குரங்கின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப கலாங்களில் இவை பட்டையை கிளப்பி வருகின்றன. நாம் அருகில் நின்று காண முடியாத சில அரிய காட்சிகளை இந்த வீடியோக்களில் காண முடிகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது சுட்டிக் குரங்கு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காண்பதற்கு அரிதான ஒரு காட்சி காணக்கிடைக்கிறது. குரங்கு ஒன்று வேக வேகமாக பாத்திரங்களை கழுவுகிறது. பொதுவாக குரங்குகள் மிகவும் குறும்புத்தனமான விலங்குகள். என்ன தான் குறும்புகள் செய்தாலும், இவை புத்திசாலி மிருகங்களாக கருதப்படுகின்றன. தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்தால் நிச்சயம் இன்ப அதிர்ச்சி அடைவீர்கள்.


மேலும் படிக்க | ’ஓரமா போய் பயம்காட்டுப்பா’ நாக பாம்புக்கு ஷாக் கொடுத்த குரங்கு..! வீடியோ


குரங்கு பாத்திரங்களை கழுவியது
வைரலான வீடியோவைப் பார்த்ததும் குரங்கு செல்லப் பிராணி என்பதும், சில தவறுகளுக்கு தண்டனை பெற்றிருப்பதும் தெரிந்தது. பாத்திரங்களைக் கழுவும் இடத்தில் அந்த குரங்கை உட்கார வைக்கிறார்கள். பின்னர் அந்த குரங்கும் அமைதியாக பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கழுவத் தொடங்குகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.


குரங்குகளின் லூட்டி வீடியோவை இங்கே காணலாம்:



குரங்கு லூட்டி 
இந்த வீடியோவில் குரங்கு செய்யும் அதிகப்படியான சேட்டையை பொதுவாக நாம் காண முடியாது.  குரங்குகளின் இந்த வீடியோ ____arun____520 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். நெட்டிசன்கள் இதை விரும்பி பார்த்தாலும், இது பல வீடியோக்களின் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றே தோன்றுகிறது. இது கேளிக்கைகாக மட்டுமே பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | ‘தம் அடிக்கும்போது பாம்பே வந்தாலும் பதற மாட்டோம்ல!!’ பெண்ணின் அதிரடி வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ