பாம்பை பார்த்தால் மனிதர்களுக்கு வேண்டுமானால் பயம் இருக்கலாம். ஆனால் நான் எல்லாம் அந்த ரகம் இல்லை என்பதுபோல் எதிரே சீறிக் கொண்டு இருந்த பாம்பை அசால்டாக டீல் செய்கிறது சின்ன குரங்கு ஒன்று. வன பகுதியில் நடந்திருந்தாலும், யாரோ ஒருவர் இந்த மோதலை அழகாக படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இப்போது இணையவாசிகளை கவர்ந்து வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
மேலும் படிக்க | பூனையுடன் விளையாடும் பாம்பு: வைரலாகும் பூனையின் மாஸ் ரியாக்ஷன்
பாம்பு என்றாலே பத்தடி தூரத்துக்கு நகர்ந்து நிற்கும் மனிதர்களுக்கு மத்தியில், சீறிக் கொண்டு ஒரு பாம்பு நின்று கொண்டிருக்கும்போது, கொஞ்சமும் அதனை சட்டை செய்யாமல் அந்த வழியாக சிறிய குரங்கு ஒன்று செல்கிறது. அதனை பார்த்த பாம்பு, ஏம்பா என்னை பார்த்தா உனக்கு கொஞ்சமும் பயமில்லையா? என கேட்பது போல் சீறிக் கொண்டிருக்க, நீ எல்லாம் எனக்கு ஒன்னுமில்ல, பயம் காட்டுறதுன்னா அந்த பக்கம்போய் பயம் காட்டு என்கிற ஸ்டைலில் அதனை டீல் செய்கிறது அந்த குரங்கு. ஆனால், விடாமல் குரங்கை முறைத்து பார்க்கும் பாம்பு, என்னை எப்படி நீ சட்டை செய்யாமல் செல்லலாம் என்கிற தொனியில் சீற, பதிலுக்கு குரங்கு பாம்பின் வாலை பிடித்து சீண்டுகிறது.
இது பார்க்கும்போது பூனையிடம் எலி சேட்டை செய்யும்போது எப்படி இருக்குமோ அந்த எண்ணம் பார்வையாளர்களுக்கு வரும். அதற்கேற்ப குரங்கும் மீண்டும் ஒரு முறை பாம்பின் வாலை பிடித்து இழுத்து வம்புக்கு இழுக்கிறது. அப்போது ரோஷத்தின் உச்சத்துக்கே சென்ற பாம்பு, குரங்கை கொத்த முற்படுகிறது. ஆனால், குரங்கு சுதாரித்து தப்பித்துக் கொள்கிறது. இன்ஸ்டாகிராமில் _Geowild பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கும் பாம்பு - குரங்கு மோதல் வீடியோவுக்கு மட்டும் இதுவரை பார்வைகள் மில்லியன்களை கடந்திருக்கிறது.
அதேநேரத்தில் மிக அருகாமையில் இருந்து இந்த வீடியோ படமாக்கப்பட்டிருப்பதால், பாம்பின் விஷம் முறிக்கப்பட்டு சமூக வலைதளங்களுக்காக பிரத்யேகமாக ஜோடிக்கப்பட்ட ஒன்றாக கூட இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பாம்பின் பிடியில் சிக்கிய நாய்க்குட்டி, உதவும் நட்பு... பதற வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ