பட்டாஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ’மொரட்டு தமிழன்டா’ பாடல்...
நடிகர் தனுஷ் மற்றும் சினேகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’மொரட்டு தமிழன்டா’ பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
நடிகர் தனுஷ் மற்றும் சினேகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’மொரட்டு தமிழன்டா’ பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
கொடி திரைப்பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ். நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த ஜூலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்த படக்குழு சமீபத்தில் படத்தின் முதல் பாடலை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாடலான மொரட்டு தமிழன்டா என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். ஆளப்போறான் தமிழன் தொடங்கி நடிகர் விஜய்க்கு ஓபனிங் பாடல் எழுதி வரும் பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு சும்மா கிழி என்ற பாடலை எழுதியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தனுஷுக்கு முரட்டு தமிழன்டா என்ற பாடலை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.