வைரல் வீடியோ: இணையத்தில் பல விதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இவற்றில் நாம் பல அரிய காட்சிகளையும் காண்கிறோம். சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பாம்புகள் பற்றிய பல வீடியோக்கள் வெளியாகின்றன. சில சமயம் சிலர் பாம்புகளுடன் விளையாடுவதைக் காணகிறோம். சில சமயங்களில் பாம்புகள் கடுப்பாகி சரியான பதிலை அளிக்கின்றன. ஆனால் பெரும்பாலான மக்கள் பாம்புகளைக் கண்டு பயப்படுகிறார்கள். பாம்பை கண்டால் ஓடிவிடுவதே பலரது வழக்கம். தற்போதும் ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 


இந்த வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஒரு சிறுவன் பாம்பு பிடிக்க செல்வதையும் அதன் பின் நடக்கும், வேடிகையும் ஆபத்தும் கலந்த நிகழ்வுகளையும் காண முடிகின்றது. 


மேலும் படிக்க | தாய் சிங்கத்தையே மிரள வைத்த குட்டி சிங்கம்! க்யூட்டான வீடியோ வைரல்! 


பாம்பின் வாலையும் தலையையும் மாற்றி மாற்றி பிடித்த சிறுவன் 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், சாலையில் ஒரு சிறுவனும் ஒரு நாகப்பாம்பும் இருப்பதைக் காண முடிகின்றது. அந்த சிறுவன் சிறிதும் பயப்படாமல், அந்த பாம்பின் அருகில் சென்று அதை பிடிக்க முயற்சிக்கிறார். முதலில் சிறுவன் பாம்பின் வாலைப் பிடிக்க முயல்கிறார். ஆனால் பாம்பு அவரை தாக்கியவுடன் சிறுவன் அதன் கழுத்தை பிடித்துக் கொள்கிறார். இங்கே ஒரு சிறிய தவறு ஏற்பட்டிருந்தாலும், அது அவரது உயிருக்கே ஆபத்தாகி இருக்கலாம். 


ஆபத்தான விளையாட்டு விளையாடிய சிறுவனின் வீடியோவை இங்கே காணலாம்: 



வீடியோவின் முடிவில் சிறுவன் பாம்பை கட்டுப்படுத்துவதில் முழு வெற்றி பெற்றிருப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சியை வேறு எங்கும் நாம் காண முடியாது. இந்த வீடியோ animalsinthenaturetoday என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.


இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 'தேவையா இந்த விபரீத விளையாட்டு?' என பலர் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க |  நீ சொன்னதலாம் கேக்க முடியாது! எட்டி உதை விட்ட நாயின் வீடியோ வைரல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ