வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமண சடங்குகளில் முக்கியமான ஒன்று மாலை மாற்றும் சடங்காகும். இதில் மணமகளும் மணமகனும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொள்கின்றனர். அதன் பின்னர் சில இடங்களில் இனிப்புகளை பரிமாற்றிக்கொள்ளும் சடங்கும் உள்ளது. அதேபோல் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக புதுமணப்பெண் புகுந்த வீட்டிற்கு போனதும் அங்கு அவர் ஏதேனும் சமைப்பார்கள் இதுவும் திருமண சடங்கின் ஒரு பகுதியாகும். அதன்படி இது தொடர்பான ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில், திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக பெண் சமையலறை சென்று சமைக்க முயரச்சிக்கிறாள். ஆனால் இங்கு அவரது நிலையைப் பார்த்தாலே உங்களால் சிரிப்பு அடக்க முடியாது. அந்தவகையில் அந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ


பாப்கார்ன் செய்யும் பெண்
மணமகள் முதலில் சமையலறையில் பாப்கார்ன் செய்ய தொடங்குவதை இந்த வைரலான வீடியோவில் நாம் காணலாம். ஒரு கடாயில் சோளத்தை போட்டவுடன் அது பறக்கத் தொடங்குகிறது. பின்னர் பாப்கார்ன் சமையலறை முழுக்க வெடிப்பதை நாம் காணலாம், அத்துடந் சமையலையும் நாசமாகிறது. தூரத்தில் நிற்கும் மணமகள் கத்திக்கொண்டே இருப்பதையும் நாம் இந்த வீடியோவில் காணலாம். அந்தப் பெண்ணைப் பார்த்தால், அவர் சமையலறைக்கு முதன்முதலில் சென்றது போல் தெரிகிறது. 


சமையல் செய்து கிச்சனை தெறிக்கவிட்ட மணமகளின் வீடியோவி இங்கே காண்க



 


இந்த வீடியோ ஆன்லைனில் வெளிவந்த உடனேயே, சிறிது நேரத்திற்கெல்லாம் நூற்றுக்கணக்கான லைக்குகளைப் பெற்றது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். இதற்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். அத்துடன் இந்த வீடியோ ghantaa என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகின்றது.



மேலும் படிக்க | மணமகளை பார்த்து மயங்கிய மணமகன் மேடையில் செய்த வேலை: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ