மணமகளை பார்த்து மயங்கிய மணமகன் மேடையில் செய்த வேலை: வைரல் வீடியோ

Funny Wedding Video: என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்படியா செய்வது? மணமேடையில் துள்ளிக்குதித்து நடனமாடிய மணமக்களின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 11:55 AM IST
  • மணமேடைக்கு வந்த மணமகள்.
  • துள்ளிக் குதித்து மகிழ்ந்த மணமகன்.
  • அதன் பின் நடந்தது என்ன தெரியுமா?
மணமகளை பார்த்து மயங்கிய மணமகன் மேடையில் செய்த வேலை: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான வீடியோக்கள் வெவ்வேறு தளங்களில் பதிவேற்றப்பட்டு, பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. அதில், திருமணம் தொடர்பான வீடியோக்களின் எண்ணிக்கையே அதிகம். திருமணம் என்பது ஒருவரது வாழ்வில் மிகமும் முக்கியமான ஒரு தருணமாகும். திருமண நாள் பற்றிய கனவுகள் அனைவருக்கும் இருக்கும். இந்த தருணத்தை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும் படி செய்ய, நாம் திட்டங்களை தீட்டுகிறோம், ஏற்பாடுகளை செய்கிறோம். சில திருமணங்களில் நாம் நம்பமுடியாத பல விஷயங்கள் நடக்கின்றன. இவை எப்போதும் நம் மனதில் நின்று விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு விஷயம் சமீபத்தில் ஒரு திருமணத்தில் நடந்துள்ளது.  

சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான சில வீடியோக்கள் அடிக்கடி பகிரப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பட்டையை கிளப்புகின்றன என்றே சொல்லலாம். தற்போது மணமக்கள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மணமகனை மேடையில் பார்த்த மணமகன் மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்கிறார். அதன் பின் நடப்பதை வீடியோவில் பார்ப்பவர்களால் மீண்டும் மீண்டும் அதை பார்க்காமல் இருக்க முடியாது. 

மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ

மகிழ்ச்சியான மணமகன்

மாப்பிள்ளை ஊர்வலம் திருமண மண்டபத்தை அடைந்துவிட்டது என்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. மணமகன் மேடையில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருக்க, மணமகள் மேடைக்கு வருகிறார். மணமகள் வருவதை பார்த்த மணமகன் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்.

மணப்பெண்ணும் மணமகனைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இருவரும் மேடையை அடைந்தவுடன் பின்னணியில் ஒரு ஹிந்திப் படப் பாடல் ஒலிக்கத் தொடங்குவதைக் காண முடிகின்றது. 

பாட்டு ஆரம்பித்தவுடன் இருவரும் அருகில் வந்து ஆட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இருவரின் நடனம் சற்று சாதாரணமாகத் தெரிந்தாலும், பின்னர் இருவரும் அட்டகாசமாக ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றனர். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மணமக்களின் நடனத்தைக் கண்டு கூச்சலிட்டனர். 

மாஸ் காட்டிய மணமக்களின் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bhutni_ke_memes என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. மணமக்களுக்கு இடையில் இருக்கும் காதலும், இந்த திருமணம் குறித்து அவர்களுக்கு உள்ள மகிழ்ச்சியும் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிவதாக இணையவசைகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | ‘இவ்ளோ பெருசா இருந்தா எப்படி?’: மணமகளுக்கு வந்த சோதனை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News