மணமகள் மணமகன் வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் பல தினுசில் காட்சிகள் காணப்படுகின்றன. சில நேரங்களில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் செய்யும் செயல்கள் நம் மனதை கொள்ளை கொள்கின்றன. சில சமயங்களில் மணமகனும், மணமகளும் தங்கள் தனித்துவமான எண்ட்ரி மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்கள். சில சமயங்களில் திருமணத்தில் மணமக்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளும் பேசுபொருளாகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் தினமும் வெளிவருகின்றன. தற்போதும் ஒரு வித்தியாசமான திருமண வீடியோ வெளிவந்துள்ளது. இதில் மணமக்கள் பந்தலிலேயே மோதிக்கொள்வதை காண முடிகின்றது. சடங்குகள் நடந்துகொண்டிருக்கும் போது, மணமகன் மணமகளை சீண்டத் துவங்குகிறார். இது மணமகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் அங்கு சண்டை வருகிறது. 


மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு கிஸ் கொடுத்த மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ 


மணமகனுடன் சண்டையிடும் மணமகள்


திருமணம் தொடர்பான இந்த வீடியோவில் மணமக்கள் பந்தலில் அமர்ந்து திருமண சடங்குகளை செய்து கொண்டிருப்பதை காண்கிறோம். ஹோம தீயை வலம் வர இருவரும் எழும் நேரத்தில் மாப்பிள்ளைக்கு வேடிக்கை செய்யத் தோன்றுகிறது. அவர் மணமகளை கிண்டல் செய்யத் தொடங்குகிறார். இந்த செயலால் கடும் கோபமடைந்த மணப்பெண், விருந்தினர்கள் முன்னிலையில் மணமகனுடன் கடுமையாக சண்டை போடுகிறார். சிறிது நேரத்தில் இருவரும் பலமாக சண்டையிடத் தொடங்குகிறார்கள். 


மணமக்களின் கடுமையான சண்டையின் வீடியோவை இங்கே காணலாம்: 



விருந்தினர்களாலும் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை


இந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் சண்டை போடும் விதத்தைப் பார்த்து, அங்கிருந்த உறவினர்களும் விருந்தினர்களும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். அவர்களுடைய செயலைக் கண்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். இந்த திருமண வீடியோ official_viralclips என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவில் எழுதப்பட்ட தலைப்பு இந்த வீடியோ கிளிப் நேபாளி திருமணத்துடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது.இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.


மேலும் படிக்க | 'ஆரம்பமே இப்படியா?' சொதப்பிய மணமகன், கடுப்பான மணமகள்: வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ