முஃகர்ரம் பண்டிகை (Remembrance of Muharram) கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை நினைவுகூறும் நாள் மொகரம் நினைவுதினமாக அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக, உலகின் அனைத்து மதங்களிலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள், வழிபாடுகள் மகிழ்ச்சியுடன் தொடங்கப்படும், ஆனால் இஸ்லாம் மதத்தில் புத்தாண்டு துக்கத்துடன் தொடங்குகிறது. உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஆங்கில ஆண்டு ஜனவரி 1 முதல் தொடங்குகிறது.
ஒவ்வொரு மதத்திலும் இனத்திலும் புத்தாண்டு என்பது ஆங்கில புத்தாண்டான ஜனவரி முதல் டிசம்பர் வரை என இருப்பதில்லை. ஆனால் எப்போது புத்தாண்டு, எந்த மதத்தில் இருந்தாலும் அது கொண்டாட்டமாக கொண்டாடப்படும். ஆனால் இஸ்லாத்தில் அப்படி இல்லை. இஸ்லாமிய புத்தாண்டு துக்கத்துடன் தொடங்குகிறது.
இஸ்லாமிய மாதங்கள்
இஸ்லாமிய மதத்தின் படி, முஃகர்ரம் (மொஹரம்) மாதத்தில் தொடங்கும் புத்தாண்டின் கடைசி மாதம் துல் ஹஜ் ஆகும். மொஹரம், சஃபர், ரபி உல் அவ்வல், ரபி உல் ஆகிர், ஜமா அத்துல் அவ்வல், ஜமா அத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல் கஃதா, துல் ஹஜ் ஆகிய மாதங்களே இஸ்லாமியர்களின் 12 மாதங்கள் ஆகும்.
இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு ஆண்டுக்கு 354 அல்லது 355 நாட்கள் மட்டுமே உண்டு என்பதால் மாதங்களின் தொடக்கம் ஆண்டுக்கு ஆண்டு மாறிக் கொண்டே இருக்கும்.
முஹர்ரம் என்பது இஸ்லாமிய வருடத்தின் (ஹிஜ்ரி) முதல் மாதம். ஆண்டு தொடங்கியதுமே முதல் மாதத்தின் 10 ஆம் தேதி, இஸ்லாத்தின் கடைசி தீர்க்கதரிசி ஹஸ்ரத் முஹம்மது சாஹிப்பின் பேரனான இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூரும் நாள் ஆகும். ரோஸ்-இ-ஆஷுரா என்று அழைக்கப்படும் இந்த மொகரம் நாள் மிகவும் முக்கியமானது. இந்த நாளில், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்று ஹுசைனின் தியாகத்தை நினைவு கூர்கின்றனர்.
தியாகிகளின் நினைவுநாள்
மொஹரம் மாதத்தின் 10 வது நாளில், ஹஸ்ரத் இமாம் ஹுசைன் இஸ்லாம் மதத்தை பாதுகாக்கும் முயற்சியில் தனது தனது உயிரை தியாகம் செய்ததாக நம்பப்படுகிறது. இதன் பின்னணியை தெரிந்துக் கொள்வோம். ஈராக்கை ஆண்டு வந்த யாசித் என்ற கொடூர அரசன், தன்னை கலீஃபாவாகக் கருதினார், அவருக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லை.
மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசர், இஸ்லாத்தின் கடைசி தீர்க்கதரிசி ஹஸ்ரத் முஹம்மது சாஹிப்பின் பேரனான இமாம் ஹுசைன், தனது கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தினார். ஆனால் ஹுசைன் இதை ஏற்காமல் அரசர் யாசித்துக்கு எதிராக போர் அறிவித்தார்.
இஸ்லாத்தின் நபி ஹஸ்ரத் முஹம்மதுவின் பேரன் ஹஸ்ரத் இமாம் ஹுசைன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கர்பாலாவில் வீரமரணம் அடைந்தார். ஹுசைன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீரமரணம் அடைந்த மாதம் முஹர்ரம் மாதம் ஆகும்.
நோன்பும் தொழுகையும்
முஹர்ரம் காலத்தில் தியாகிகளின் தியாகத்தை எண்ணி, துக்கம் அனுசரிப்பதுடன், எந்தவொரு நல்ல காரியத்தையும் முஸ்லிம்கள் செய்யமாட்டார்கள். மொகரம் நாளில் கருப்பு நிற ஆடைகள் அணிவார்கள். நோன்பு வைத்து வழிபடுவது வழக்கமானது என்றாலும், இஸ்லாத்திற்காக உயிரையே தியாகம் செய்த முன்னோர்களை நினைத்து, கூர்மையான ஆயுதங்களால் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈராக்கின் முக்கிய நகரம் கர்பலாவில் தான் புனிதப் போர் நடைபெற்றது என்பதும், இஸ்லாமியர்களுக்கு மெக்கா-மதீனாவிற்கு அடுத்தபடியான முக்கிய இடம் கர்பலா என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொஹரம் திருநாளை சிலர் கொண்டாடினால், சிலர் துக்கம் அனுஷ்டிக்கின்றனர். இஸ்லாமியர்களின் ஷியா மற்றோன்று சன்னி பிரிவினர் வெவ்வேறு விதமாக மொகரத்தை அனுசரிக்கின்றனர். மொஹரம் பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை துக்க நாளாக ஷியா பிரிவினர் கடைப்பிடிக்கின்றனர். இதுவே, எகிப்திய அரசரை வெற்றி கொண்ட நாளாக மொகரம் திருநாளை சன்னி பிரிவினர் கொண்டாடுகின்றனர்.
நோன்பு
இஸ்லாமின் முதல் மாதத்தின் 9 மற்றும் 10ம் நாளிலும் நோன்பு இருப்பது வழக்கம் என்றாலும், சிலர் 10ம் நாள் மட்டும் உண்ணா நோன்பு இருக்கின்றனர். சிலர் இந்த தியாகத் திருநாளில் ஆசுரா என்று கத்தியால் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இந்த தியாகத்திருநாள் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ