OnePlus Nord 4 Specifications : இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord 4 சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 செயலியைக் கொண்டுள்ளது,4 ஆண்டுகளுக்கு Android OS புதுப்பிப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம்...
அரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் OnePlus Nord 4 இன் விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்...
OnePlus இன் புதிய போன் Nord 4-வின் விலை, நார்ட் சீரிஸின் முந்தைய மாடலான OnePlus Nord 3 ஐ விட குறைவாக உள்ளது. நேற்று இந்தியாவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நார்ட் 4 போன் ரூ.30,000க்கு குறைவாக கிடைக்கிறது, Nord 3 இன் விலை ரூ.33,999 ஆகும்
OnePlus Nord 4 விலை, வடிவங்களுக்கு ஏற்றாற் போல மூன்று விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ.29,999 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ.32,999 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ.35,999
ஆகஸ்ட் 2 முதல் வெளிச் சந்தையில் விற்பனைக்கு வரத் தொடங்கும் நார்ட் 4 போனை, ஜூலை 20 முதல் அமேசானில் முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம். அறிமுகச் சலுகையாக, குறிப்பிட்ட வங்கி அட்டைகளில் ரூ.3,000 வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது
6.74-இன்ச் U8+ OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம், 2,150 nits வரை செல்லும் பிரெட்னெஸ் கொண்ட நார்ட்4, Qualcomm Snapdragon 7+ Gen 3 செயலியைக் கொண்டுள்ளது. உங்கள் தேவைக்கேற்ப 8ஜிபி, 12ஜிபி அல்லது 16ஜிபி ரேம் தேர்வு செய்யலாம். 128 ஜிபி, 256 ஜிபி அல்லது 512 ஜிபி என சேமிப்பகத்திற்கான பல விருப்பங்களும் உள்ளன
சக்திவாய்ந்த 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ள OnePlus Nord 4, 100W SuperVOOC வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள சார்ஜர் வெறும் 28 நிமிடங்களில் போனை 1 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும்
திரையின் உள்ளே கைரேகை சென்சார், Dolby Atmos ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்க்காக மேம்பட்ட மோட்டார், ரிமோட் கண்ட்ரோல் போல வேலை செய்யும் ஐஆர் பிளாஸ்டர் என பல சிறப்பம்சங்கள் உள்ளன
ஃபோனில் 50 மெகாபிக்சல் பிரதான Sony Light600 சென்சார் கேமரா உள்ளது, இது சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. கூடுதலாக, இது 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கோண பின்புற கேமரா மற்றும் செல்ஃபிக்களுக்கான 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன், Nord 4, OnePlus Pad 2 டேப்லெட், வாட்ச் 2R மற்றும் Nord Buds Pro 3 என பல்வேறு சாதனங்களை ஒன்பிளஸ் இன்று அறிமுகப்படுத்துகிறது