சின்னபுள்ளதனமால்ல இருக்கு!! மணமேடையில் மணமகன் மணமகள் செய்த காரியம்
Funny Video: திருமணத்தில் மணமகன் இனிப்பு கொடுக்கப்போய் அது அதிரடியில் முடிந்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
திருமணத்தில், பல வகையான சடங்குகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் வேடிக்கையான நகைச்சுவை நிகழ்வுகள் தொடர்பான பல வீடியோ-க்களை நாம் இணையத்தில் பார்த்து வருகிறோம். எனினும், திருமணத்தில் மணமகனுக்கும் மணமகனுக்கும் இடையே பயங்கரமான சண்டை நடக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால், அதுவும் நடந்துள்ளது.
திருமணம் தொடர்பாக சமீபத்தில் வெளிவந்துள்ள வீடியோவில், மாலை அணிவிக்கும் போது மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையில் கோவம் ஏற்பட்டு அது அடிதடியில் முடிகிறது.
மாலை மாற்றும் சடங்குக்கு முன்னர், இனிப்பு ஊட்டும்போது ஏற்படும் சலசலப்பு இருவருக்கும் இடையில் பெரிய கலவரத்தை உருவாக்கி விடுகிறது. இனிப்பு கொடுக்கப்போய் அது அதிரடியில் முடிந்த சம்பவம் அங்கிருந்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமக்கள் சண்டை
இந்த வைரலான வீடியோவில், மணமக்கள் இருவரும் திருமண விழா மேடையில் இருப்பதை காண முடிகின்றது. திருமண விழாவில் மணமக்களின் பல உறவினர்களும் உள்ளனர். மணமகன் மணமகளுக்கு இனிப்புகளை ஊட்டுகிறார். ஆனால் அதற்கும் மணமகள் சரியாக ஒத்துழைக்கவில்லை.
மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ
இதனால் கோவமடையும் மணமகன் மணமகள் மீது இனிப்பை வீசுகிறார். பதிலுக்கு மணமகளும் ஒரு இனிப்பை எடுத்து மணமகன் மீது வீசுகிறார். மணமகளின் இந்த செய்கையால் எரிச்சலடைந்த மணமகன், தான் மேடையில் இருப்பதையும் பாராமல் மணமகளை அறைகிறார்.
மணமகள் மணமகனின் அந்த வினோத வீடியோவை இங்கே காணலாம்
தலை தப்பியது
மணமகன் மணமகளை அடித்த வேகத்தில் அவர் கீழே விழுகிறார். உறவினர்கள் அவர் தலையை பற்றிக்கொள்வதால், தலையில் அடிபடாமல் அவர் தப்பிக்கிறார்.
இந்த காணொளியில் மணமக்களுக்கு இடையே நடந்த சண்டையை பார்த்த விருந்தினர்களும் ஆச்சரியமடைந்தார்கள். இந்த வீடியோவை ஃபேஸ்புக் பயனாளி ஒருவர் பதிவேற்றம் செய்துள்ளார். இதுவரை இந்த வீடியோ பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த பிறகு, பயனர்களும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR