வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
சமூக ஊடகங்கள் மக்கள் தங்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கும் ஊடகமாக மாறியுள்ளது. இன்றைய காலத்தில், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் டிரெண்டாகி வருகின்றது. இவை சமூக வலைதளங்களிலும் பகிரப்படுகின்றன. சமீபத்தில் இப்படி ஒரு கல்யாண வீடியோ ஷூட் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த வேடிக்கையான வீடியோ மக்களை மிகவும் சிரிக்க வைக்கிறது. சில பயனர்கள் திருமணம் சர்க்கஸ் ஆகிவிட்டது என்றும் கூறுகிறார்கள். இப்பேதெல்லாம் பல திருமணங்களை புரோகிதர்களுக்கு பதிலாக போட்டோகிராபர்களால்தான் நடத்துகிறார்கள் என சிலர் கிண்டலாகக் கூறுகிறார்கள்.
திகைக்க வைக்கும் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்!!
வைரலாகி வரும் இந்த வீடியோ ஒரு கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒரு ஜோடி தங்கள் ப்ரீ வெட்டிங் ஷோட்டை எடுத்துக்கொண்டிருப்பது தெரிகிறது. இதற்கிடையில், புகைப்படக்காரர் மணமகனை வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்கச் சொல்கிறார். அதன் பின்னர் நடந்ததைப் பார்த்தால், ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.
மணமகள் முன் தனது கிரியேட்டிவிட்டியை வெளிக்காட்ட மணமகன் செய்த வேலை அனைவரையும் திகைக்க வைக்கிறது. தற்போது இந்த வீடியோவை பார்த்து அனைவரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
With a pre-wedding shoot like this, can't imagine the kind of circus the marriage would entail...pic.twitter.com/bP9ye9AzXe
—(@Tall_Dreams) February 23, 2022
மேலும் படிக்க | பிளான் போட்டு அட்டாக் செய்த பருந்தை பதற வைத்த பாம்பு: வைரல் வீடியோ
மணமகன் கால்களை உயர்த்தி நின்றார்
வீடியோவில், மணமகன் தலைகீழாக நிற்பதையும், மணப்பெண் நடனமாடுவதைப் போல் போஸ் கொடுப்பதையும் காண முடிகின்றது. இப்படி கூட யாராவது போஸ் கொடுப்பார்களா என்றுதான் இதைப் பார்க்கும் பெரும்பாலானவர்களுக்கு தோன்றுகிறது.
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. எனினும், இது எந்த கோவிலில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் ஹிட் ஆனது
இந்த வீடியோவை Tall_Dreams என்ற கணக்கில் சேத்னா என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமான முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
‘தலைகீழ நின்னாவது உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்’ என்று சிலர் கூற கேட்டுள்ளோம். இங்கு ஒருவர் அதை செய்தே காட்டிவிட்டார்!!
மேலும் படிக்க | ‘வசூல் ராஜா MBBS’ பாணியில் நடந்த ஹைடெக் காப்பி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR