ஓடுங்க ஓடுங்க...சிங்கம் வருது.. : மாடுகளை காப்பாற்றிய ஹீரோ நாய், வைரல் வீடியோ
Intelligent Dog Video: சிங்கத்தை எதிர்த்து நாயால் ஏதாவது செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியும் என புரிய வைக்கிறது இந்த வைரல் வீடியோ.
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
சிங்கம் காட்டின் ராஜா. அதை காட்டின் ராஜா என அழைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதன் கம்பீரமும், ஆக்ரோஷமும், உறுதியும் மற்ற விலகங்குகள் அதை ஒரு மன்னனாக பார்க்கவைக்கின்றன. சிங்கங்களின் பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களிலும் பார்த்துள்ளோம். வேகமும் ஆபத்தும் நிறைந்த சிங்கம் ஒரு கொடூரமான விலங்காகும். என்னதான் நடந்தாலும் இது தனது இரையை தப்பிக்க விடாது.
ஆனால், இணையத்தில் பகிரப்படும் சில ஆச்சரியமான வீடியோக்களில் வேறு சில விலங்குகள் சிங்ககங்களை தோற்கடிப்பதையும் பார்த்துள்ளோம். இப்போதும் அப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. சிங்கம் ஒன்று சில மாடுகளை தனது இரையாக்கும் முன் ஒரு நாய் சிங்கத்திடமிருந்து அந்த மாடுகளை காப்பாற்றுவதை வீடியோவில் காண முடிகின்றது.
வனவிலங்குகள் அனைத்தும் பசியை போக்க இயற்கையையே சார்ந்துள்ளன. ஆனால் வனப்பகுதியில் அதிகரித்து வரும் மனித ஆக்கிரமிப்பு, உணவு பற்றாக்குறை மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக வனவிலங்குகள் உணவு தேடி மனித குடியிருப்புகளுக்கு வருகின்றன. வன விலங்குகள் மனிதர்களின் வீடுகளுக்குள் நுழைந்து செல்லப்பிராணிகளை இரையாக ஆக்குவது போன்ற பல வீடியோக்கள் பகிரபடுகின்றன.
தற்போது வெளிவந்துள்ள வீடியோவில், இரவின் இருளில் ஒரு சிங்கம் ஒரு மனித குடியிருப்புக்குள் நுழைவதை காண முடிகின்றது. அது அங்குள்ள வளர்ப்பு மாடுகளை தன் இரையாக்க நினைக்கிறது. ஆனால் ஒரு நாய் அதன் முழு திட்டத்தையும் தவிடுபொடியாக்கி விடுகிறது.
மேலும் படிக்க | பளார்... சிறுத்தையை அடித்த பல்லி: ஷாக்கில் சிறுத்தை, நாமும்தான்...வைரல் வீடியோ
சிங்கத்துக்கு வினையாக வந்த நாயின் வீடியோவை இங்கே காணலாம்:
இப்படித்தான் மாடுகளின் உயிரைக் காப்பாற்றியது நாய்
தன் சொந்தத் தெருவில் நாய் கூட ஒரு சிங்கம் போலதான் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதுபோன்ற சில காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. ஒரு கிராமத்தின் குறுகிய சாலையில் மாடுகளின் கூட்டம் மரண பயத்தில் ஓடுவதை வீடியோவில் பார்த்தீர்கள். இதற்கிடையில், அவற்றுக்குப் பின்னால் ஒரு நாய் குரைத்துக்கொண்டு ஓடுவதையும் காண முடிகின்றது. பின்னர் நாய் திரும்பிப் பார்த்து, சிறிது நேரம் அங்கேயே நின்று, நிலைமையை புரிந்துகொண்டு பொறுமையிழந்து குரைக்கிறது. அப்போது பின்னால் ஒரு சிங்கம் வருவதைக் கண்டு நாய் மீண்டும் மாடுகளுக்கு ஆபத்தை எச்சரிப்பது போல் பின்தொடர்கிறது.
தன்னுடைய சமயோஜித புத்தியால் அந்த நாய் சிங்கம் வரும் முன் மாடுகளை அந்த இடத்திலிருந்து அகற்றி விடுகிறது. அனைத்து மாடுகளையும் முன்னால் விட்டு அது பின்னால் ஓடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இந்த அற்புதமான வீடியோ ட்விட்டரில், CCTV IDIOTS என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குளும் வியூஸ்களும் கிடைத்துள்ளதோடு இணையவாசிகள் இதற்கு பல கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | உடைந்த நாற்காலி..பென்ஷன் பெற உச்சி வெயிலில் நடந்து செல்லும் மூதாட்டி: வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ