வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலை என்றாலே அனைவரும் அச்சப்படுவது வழக்கம். ஆனால், சிலருக்கு இது மிக சாதாரணமான விஷயமாகவும் உள்ளது. அதுவும், ஒன்று இரண்டல்ல, டஜன் கணக்கான முதலைகளை ஒரு பெண் அசால்டாக கையாள்வதை காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்தில் சிக்கிய மிருகங்களை காக்கும் அனிமல் ரெஸ்கியூயரான ஸேன் ஷாபிரோ, தனது இன்ஸ்டாகிராம் ரீலில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் அவர், ‘மேடி இந்த முதலைகளுக்கு உணவளிக்கிறார்’ என எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | 'நீயா நானா பாத்துடலாம்': குரங்குக்கும் பெண்ணுக்கும் செம சண்டை, ஜெயிச்சது யார்? வைரல் வீடியோ


இந்த வீடியோவில், மேடி என்ற ரெப்டைல் ஹாண்ட்லர், தனது கைகளால் முதலைகளுக்கு உணவளிப்பதைக் காண முடிகின்றது. அந்தப் பெண்ணை சுற்றி சுமார் 30 முதலைகள் உள்ளன. அவை பெண்ணுக்கு அருகில் கூட்டமாக இருப்பதையும், உணவை உட்கொள்ள தங்கள் முறைக்காக காத்திருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. வீடியோவை பார்க்கும்போது, மேடி என்ற இந்த பெண் துணிச்சலுடன் இருப்பது மட்டுமல்லாமல், முதலைகளை கையாள்வதில் திறன் படைத்தவராகவும் தெரிகிறார். அவர் பயமில்லாமல் முதலையின் தலையில் தட்டுவதையும் தட்டிக்கொடுப்பதையும் காண முடிகின்றது. முதலைகளும் அவரிடம் எந்த ஆக்ரோஷத்தையும் காட்டவில்லை. 


தற்போது வைரல் ஆகியுள்ள இந்த வீடியோ 22,000க்கும் அதிகமான வியூஸ்களையும் 650 லைக்குகளையும் பெற்றுள்ளது. முதலைகள் போன்ற ஆபத்தான மிருகத்தால் சூழப்பட்டபோதும் ஒரு பெண் பயப்படாமல் இருக்கும் அதிர்ச்சிகரமான காட்சியை பார்த்து நெட்டிசன்கள் நம்ப முடியாமல் திகைத்துப் போகின்றனர். ‘அவை ஒரு நாள் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘இல்லை அப்படி நடக்காது’ என மற்றொருவர் எழுதியுள்ளார். இப்படி இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. 


முதலைகளுக்கு மத்தியில் மாஸ் காட்டும் பெண்ணின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



மேலும் படிக்க | விளையாட்டு விபரீதமானது: நபரை பதம் பார்த்த பாம்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ