முடிஞ்சா என்னய புடி டா பாக்கலாம்..ரோலிங்கில் நாயை சுத்தவிட்ட பூனை!

பூனை ஒன்று ரோலிங் சேரில் சொகுசாக அமர்ந்து சுற்றிக்கொண்டு நாயை சீண்டி சுத்தவிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 22, 2022, 10:34 AM IST
  • சேரில் நாயை சுற்றவிட்ட பூனை.
  • நாய்குட்டியும் அதன் பின்னால் சுற்றி சுற்றி வருகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ.
முடிஞ்சா என்னய புடி டா பாக்கலாம்..ரோலிங்கில் நாயை சுத்தவிட்ட பூனை! title=

பூனைக்கும், நாய்க்கும் அடிக்கடி நடக்கும் சிறப்பான நிகழ்வுகள் பலவும் இணையத்தில் வெகுவாக கவர்ந்துவிடுகிறது.  சில சமயம் பூனைகளும், நாய்களும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்ளும் காட்சிகள் அல்லது சில சமயம் நாய்களும், பூனைகளும் ஒன்றுக்கொன்று பாசமாக கட்டித்தழுவும் காட்சிகள் என நாய் மற்றும் பூனை சம்மந்தப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவி கிடக்கின்றது.  நாயும், பூனையும் பலரது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதால் இவற்றின் வீடியோக்கள் அனைவரையும் கவர்ந்துவிடுகிறது.  தற்போது பூனை ஒன்று நாயை வம்பிழுக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை... கிரேனில் ஸ்கூட்டருடன் தொங்கும் நபர்!

 

இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு ரோலிங் நாற்காலியில் பூனை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு இருக்கிறது, அதனருகில் தரையில் ஒரு நாய் நின்றுகொண்டு இருக்கிறது.  அந்த பூனை அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு சுற்றிக்கொண்டே நாயிடம் வம்பு இழுக்கிறது.  ரோலிங் நாற்காலி சுற்றுவதால் அதில் அமர்ந்திருக்கும் பூனையை, அந்த நாயால் அடக்கமுடியவில்லை.  அதனால் நாய், தன்னை வம்பிழுக்கும் பூனையை அடிக்க முயற்சி செய்து நாற்காலி சுற்றுவதற்கேற்ப அதுவும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது.

பூனை அமர்ந்துகொண்டு இப்படி நாயை பாடாய்படுத்தும் காட்சி பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.  இணையத்தில் கடந்த ஆகஸ்ட்-16ம் தேதி பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு எட்டாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல சிறப்பான கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க | உ.பியில் காவலர்கள் போட்ட நாகினி நடனம்; வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News