'நீயா நானா பாத்துடலாம்': குரங்குக்கும் பெண்ணுக்கும் செம சண்டை, ஜெயிச்சது யார்? வைரல் வீடியோ

Monkey Viral Video: குரங்குக்கும் கோபம், பெண்ணுக்கும் கோபம். இருவருக்கும் நடக்கும் சண்டையில் வென்றது யார்? இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2022, 04:31 PM IST
  • கோவிலில் குரங்குக்கும் பெண்ணுகும் சண்டை.
  • யார் சண்டையில் வெற்றி பெற்றது?
  • இணையத்தில் வீடியோ வைரல்.
'நீயா நானா பாத்துடலாம்': குரங்குக்கும் பெண்ணுக்கும் செம சண்டை, ஜெயிச்சது யார்? வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. சில நேரங்களில் இந்த வீடியோக்களை பார்ப்பது வேடிக்கையாகவும், சில சமயங்களில் மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றது.

விலங்குகள் மற்றும் மனிதர்கள் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இவர்களுக்கு இடையே ஒரு வித்தியாசமான உறவு காணப்படுகிறது. பல்வேறு விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற குரங்குகள் அவற்றின் வெவ்வேறு உள்ளுணர்வுகளுக்கு அறியப்படுகின்றன. அவற்றுக்கு வேண்டியது நடகவில்லை என்றால், அனைத்தையும் கலைத்து களேபரம் செய்யவும் அவை தயங்குவது அல்ல. 

சமீபத்தில், இதே போன்ற ஒரு குரங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும். வைரலாகி வரும் இந்த வீடியோவில், குரங்கு எதையோ இழுப்பதையும் அது கிடைக்காத பட்சத்தில் கோபப்படுவதையும் காண முடிகின்றது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் பெண்ணுக்கும் குரங்குக்கும் இடையே நடக்கும் இந்த பயங்கர சண்டையை பார்த்து அனைவரும் திகைத்து போயுள்ளனர்.

மேலும் படிக்க | ‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

சினம் கொண்டு சீண்டிய குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்

இந்த வைரலான வீடியோவில், குரங்குக்கும் பெண்ணுக்கும் இடையே பரபரப்பான சண்டை நடக்கிறது. வீடியோவின் தொடக்கத்தில், ஒரு குரங்கும் ஒரு பெண்ணும் கோவிலில் நிற்கிறார்கள், அவர்கள் கண்ணாடிக்காக சண்டையிடுவது காணப்படுகின்றது. பெண்ணின் கையில் உள்ள கண்னாடியை குரங்கு பிடுங்குகிறது. அதை திரும்ப பெற பெண் குரங்குடன் சண்டை இடுகிறார். பெண்ணுக்கும் குரங்குக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 

குரங்கை போலவே பெண்ணும் பயங்கர கோபத்துடன் இருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. திடீரென குரங்கின் கையிலிருந்து கண்ணாடி கீழே விழவே, சமயம் பார்த்து அந்த பெண்ணும் அதை எடுத்துக்கொள்கிறார். 

இந்த வீடியோ சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. வீடியோவை மக்கள் அதிக அளவில் பார்த்து லைக் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ 1.27 லட்சத்திற்கும் அதிகமான முறை லைக் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள் பல்வேறு வகையான வேடிக்கையான கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சரக்கடித்த குரங்கு செய்யும் லூட்டி: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News