Viral Video: எலி குட்டியை காக்க தாய் எலி பாம்புடன் நடத்தும் போராட்டம்!

Viral Video of Snake Vs Rat: தனது குட்டியின் உயிரை காப்பாற்ற போராடும் எலியின் போராட்டம்  தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.    

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 22, 2022, 11:42 AM IST
  • பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும்.
  • காணொளியில் எலிக் குட்டியை வாயில் கவ்வியபடி ஓடுவதைக் காணலாம்.
  • இந்த தாய் எலி தனது குழந்தையை காப்பாற்ற தைரியமாக போராடுகிறது.
Viral Video: எலி குட்டியை காக்க தாய் எலி  பாம்புடன் நடத்தும் போராட்டம்! title=

இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. அதில விலங்ககுளுக்கு இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில், தனது குட்டியின் உயிரை காப்பாற்ற போராடும் எலியின் போராட்டம்  தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

பாம்புகள் மிகவும் ஆபத்தான உயிரினங்கள். இவைகளை சீண்ட யாருக்கும் தைரியம் வராது.  பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும் என்றாலும், இந்த தாய் எலி தனது குழந்தையை காப்பாற்ற தைரியமாக போராடுகிறது. தாயின் தியாகம் மற்றும் அன்பைக் காட்டும் பல காணொளிகள் சமூக வலைதளங்களில் மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளன. அந்த வகையில் இந்த வீடியோவும் மக்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இந்தக் காணொளியில் எலிக் குட்டியை வாயில் கவ்வியபடி ஓடுவதைக் காணலாம்.

வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:

மேலும் படிக்க |  Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்

தாய் எலி  தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அதன் பின்னால் ஓடுகிறது. இந்த எலி தனது முழு சக்தியையும் பிரயோகித்து போராடுவதை காணலாம். இவ்வளவு சிறிய எலி, பாம்பு போன்ற சக்தி வாய்ந்த உயிரினத்திற்கு சமமகா போரொடுவது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இறுதியில் தாய் பாசம் தான் வென்றது.  அந்த தாயின் ஆக்கிரோஷமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல், பாம்பு தான் பிடித்த எலி குட்டியை கீழே போட்டு விட்டு ஓடி விடுகிறது

மேலும் படிக்க |  Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News