‘நீ ஊதித்தள்ளு ராஜா’: சிகரெட்டுடன் மாப்பிள்ளையை வரவேற்ற மாமியார், ஏங்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
Funny Wedding Video: இப்படி ஒரு திருமண சடங்கா என நம்மை வியக்க வைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இவற்றில் பல மிகவும் பழமையான மற்றும் செழுமையான சம்பிரதாயங்களாக உள்ளன. பல திருமண வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. தற்போது திருமண சடங்கு குறித்த வித்தியாசமான வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
தனது புதிய மருமகனை மாமியார் வரவேற்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதில் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறீர்களா? வழக்கமாக, புது மாப்பிள்ளை, மணப்பெண்ணை, வீட்டார், பால் பழம், அல்லது இனிப்புகள் அளித்து வரவேற்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு பெண்ணின் தாயார் மாப்பிள்ளைக்கு பான் மற்றும் சிகரெட் கொடுத்து அவரை வரவேற்கிறார்.
மேலும் படிக்க | ஆட்டிடம் வீண் வம்பு பண்ணும் பாம்பு ...குசும்புக்கார பாம்பின் வைரல் வீடியோ
வித்தியாசமான மாப்பிள்ளை வரவேற்பை இங்கே காணலாம்:
பாரம்பரிய உடையில் மணமகனைச் சுற்றி ஏராளமான விருந்தினர்கள் இருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. சிறிது நேரம் கழித்து, மணமகனின் மாமனார் தனது மனைவியிடம் சிகரெட் கொடுப்பதைக் காண்கிறோம். மணமகனின் மாமியார் அவரது வாயில் சிகரெட்டை வைக்கிறார். அதன் பிறகு, மணமகளின் தந்தை சிகரெட்டை தீப்பெட்டியால் பற்றவைக்கிறார். முதல் தீக்குச்சி பற்றிக்கொள்ளாமல் போகவே, அவர் புதிய தீக்குச்சியால் தீப்பெட்டியில் உரசி ஏற்றுகிறார்.
திருமணத்திற்கு விருந்தினராக வந்திருந்த ப்ளாகர் ஜூஹி கே படேல், ‘தெற்கு குஜராத்தில் உள்ள சில கிராமங்களில் இது ஒரு பாரம்பரிய வழக்கம்.’ என்று கூறியுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அது விரைவில் வைரலானது. திருமணங்களில் பொதுவாக விருந்தினர்கள் கூட புகைபிடிக்க மாட்டார்கள் என்பதால், இந்த விசித்திரமான அசாதாரண பாரம்பரியம் பல நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சிலர் இதை பார்த்தவுடன் முதலில் வியப்படைகிறார்கள். எனினும், மணமகன் புகைபிடிக்கவில்லை என்றும், அவரது மாமியார் மாமனார் சிகரெட்டை பற்றவைக்கவும் இல்லை என்றும், இது சடங்கின் ஒரு பகுதி மட்டுமே என்றும் ஜூஹி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் உணவு பதிவர் joohiie பகிர்ந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இது பாரம்பரியம் என்ற பெயரில் மிகப்பெரிய முட்டாள்தனம்" என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். ‘எனக்கும் இப்படிப்பட்ட மாமியார் வீடுதான் வேண்டும்’ என மற்றொரு பயனர் வேடிகையாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க | முதலையை முதுகில் சுமக்கலாமா? உப்புமூட்டை தூக்க யாரும் கிடைக்கலை! டூ மச் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ