முதலையை முதுகில் சுமக்கலாமா? உப்புமூட்டை தூக்க யாரும் கிடைக்கலை! டூ மச் வீடியோ வைரல்

Little Boy Video Viral: சின்னப் பையனுக்கு இவ்வளவு துணிச்சலா? ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியையும் கொடுக்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகிறது! ஆயிரமே இருந்தாலும் இப்படி செய்யலாமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2023, 05:01 PM IST
  • சின்னப்பையன் செய்யற வேலையா இது?
  • முதலையை முதுகில் சுமக்கலாமா?
  • முகம் சுளிக்கும் மக்கள் வீடியோ வைரல்
முதலையை முதுகில் சுமக்கலாமா? உப்புமூட்டை தூக்க யாரும் கிடைக்கலை! டூ மச் வீடியோ வைரல் title=

உப்புமூட்டை வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அவற்றில் சில வீடியோக்கள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கின்றன. அவை அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவை மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்க வைக்கும் என்றாலும், சிலருக்கு, சில வீடியோக்கள் அதிர்சியையும் மனதில் அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன.

சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், மோதல் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் என பல்வேறு வகை வீடியோக்களும் சமூக ஊடகங்களை கலக்கி வருகின்றன. சிறுவர்கள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன.

அதிலும், விலங்குகளுடன் விளையாடும் சிறுவர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. விலங்குகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

மேலும் படிக்க | அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் நடுரோட்டில் இப்படியா செய்றது..வீடியோ வைரல்

தற்போது வெளிவந்துள்ள காணொளி வித்தியாசமாக இருக்கிறது. இந்த வீடியோவுக்கு கலவையான எதிர்வினைகள் வந்துள்ளன. இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

இந்த வீடியோவை பார்த்தால் என்ன தோன்றுகிறது? அதிர்ச்சியா வியப்பா இல்லை சங்கடமா?. வீடியோவில் சிறுவன், முதலையை தூக்கிக் கொண்டு ஓடுவது போல், வேகமாக நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் படிக்க | குட்டிக்காக உயிரை பணயம் வைத்த தாய் குரங்கு: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ

பொதுவாக, சிறு வயதில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு இப்படி உப்புமூட்டை தூக்கி விளையாடுவோம். ஆனால், முதலையுடன் விளையாடுவது என்பதும், அதையும் உடலோடு உடல் ஒட்டி தூக்கிக் கொண்டு செல்வது என்பதையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஏன் இப்படி ஒரு செயலை செய்கிறான் என்ற ஆச்சரியமான கேள்வியும் எழுகிறது. உண்மையில் இது உண்மையான முதலையா என்ற ஐயமும் எழுகிறது. அடுத்த நொடியே, தலையை ஆட்டும் முதலையை பார்த்ததும், இது உண்மையான முதலை என்பது உறுதியாகிறது. எப்படியிருந்தாலும் இப்படி பண்ணலாமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

முதலையை முதுகில் உப்புமூட்டையாய் தூக்கிச் செல்வதற்கு என்ன அவசியம் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.  

மேலும் படிக்க | ‘யாரு கிட்ட!!’: வேட்டையாட வந்த பாம்பை பின்னிப்பெடலெடுத்த தவளை, வேற லெவல் வைரல் வீடியோ

சிறுவனின் குறும்பா இது?
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பள்ளி படிக்கும் வயதுடைய இந்த சிறுவன் ஏன் இப்படி முதலையை தனது உடலோடு உடல் ஒட்டும்படி, உப்புமூட்டை போல தோளில் கைகளைப் போட்டு பிடித்துச் செல்கிறான்?

இதற்கு பதில் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. ஆனால், முதலையில் தோல் பார்த்தாலே, கரடுமுரடாக இருக்குமே, அது சிறுவனை அழுத்தவில்லையா? தோல் வியாதி வராதா என நமக்கு பல கேள்விகள் எழுகின்றன.

 மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News