ஒரு சீட்டுக்கு இப்படியா..ஓடும் ரயிலில் களேபரம்..அதிர வைக்கும் வீடியோ
Funny Video: ரயிலில் இருக்கைக்காக பெண் ஒருவர் ஆணிடன் சண்டையிடுவதை வீடியோவில் நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள், சண்டைகள் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு ஆண் பெண்ணின் சண்டை வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சண்டையிடும் வீடியோ வெளியாகியுள்ளது. மும்பை லோக்கல் ரயில் ஒன்றில் இருக்கைக்காக ஒரு ஆணிடம் பெண் ஒருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப் பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடும் சண்டைக்கு பின் அவரே அந்த நபரை அமரச் சொன்னது தான்.
சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில், மும்பை உள்ளூர் ரயிலின் பெட்டியில் பயணிகள் நிறைந்திருப்பதைக் காணலாம். இந்த ரயிலில் கால் வைக்க கூட இடமில்லை. இதனிடையே அங்கிருந்த பெண் ஒருவர் தனக்கு முன் நிற்கும் ஆண் பயணியிடம் மோசமாக தகராறு செய்வதை நாம் காணலாம். முதலில் அந்த ஆணை இருக்கையில் இருந்து எழுந்துக்க சொன்ன அந்த பெண், பின்னர் அவரிடம் சண்டையிட்டு ரயிலுல் இருந்து வெளியே இறங்க கூறுகிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இறுதி வரை அந்த பெண் அந்த நபரை வம்பிழுத்துக் கொண்டே இருக்கிறார். அத்துடன் இந்த வீடியோவை முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.
வீடியோவை இங்கே காணுங்கள்:
சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை gharkekaleshh என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | ஓடும் ரயிலில் இப்படியா... காதல் ஜோடிகளின் அதிர்ச்சி செயல்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ