வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தண்ணீரில் வாழும் மிகவும் ஆபத்தான விலங்குகளில் முதலை ஒன்றாக கருதப்படுகிறது. முதலை நீர் மற்றும் நிலம் இரண்டிலும் மிகவும் வசதியாக வாழக்கூடிய விலங்காகும். ராட்சத முதலைகள் தங்கள் இரைக்கு இரக்கமற்ற மரணத்தை கொடுப்பதில் பெயர் பெற்றவை. அவை பெரும்பாலும் தங்கள் பற்களால் சிக்கிய உயிரினத்தை துண்டுகளாக கிழித்து, அவற்றை முழுவதுமாக விழுங்கிவிடுகின்றன. ஆகையால், எந்த உயிரினமும் முதலையுடன் சண்டையிட விரும்புவதில்லை. முதலைகளின் பல திகிலூட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. 


தற்போது, ​​இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு முதலையின்  வீடியோ அதிகளவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால், பயனர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த இளைஞர்களின் ஆபத்தான குறும்புகளைப் பார்த்து அவர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். வீடியோவில், இரண்டு இளைஞர்கள் ஆற்றில் மீன்பிடிக்கும்போது முதலையுடன் சண்டையிடுவதைக் காண முடிகின்றது. இந்தக் காட்சியைப் பார்த்ததும் இணையவாசிகளால் தங்கள் கண்களையே நம்ப முடியாமல். ஆபத்தான விலங்கிடம் துளியும் அச்சமில்லாமல் இவர்கள் காட்டும் அசட்டுத் தைரியம் சிலரை கோவப்பட வைக்கிறது.


மேலும் படிக்க | ’பூமி மூச்சுவிடும் விநோதம்’ இணையத்தில் பரவும் வீடியோ வைரல்


முதலையுடன் மோதும் இளைஞர்களின் வீடியோவை இங்கே காணலாம்:



மனதை உலுக்கும் வீடியோ


வீடியோவில், ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்களின் படகில் முதலை ஒன்று திடீரென்று ஏறி வருவதை காண முடடிகின்றது. இதனால் பயந்து இளைஞர்கள் அதை விரட்ட முயன்றனர். இந்த முயற்சியில் ஒரு இளைஞர் தன் உயிரைப் பணயம் வைத்து முதலையை குத்த முயற்சிக்கிறார். முதலை தன்னுடைய வாயை திறந்து அவரை அச்சுறுத்துகிறது. பின்னர் மற்றொரு இளைஞர் சற்று புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். முதலையின் வாலை பிடித்து அவர் அதை தண்ணீரில் தள்ள முயற்சிக்கிறார். முதல் முயற்சியில் தோல்வி அடைந்தாலும், அடுத்த முறை அவருக்கு வெற்றி கிடைக்கிறது. முதலையின் வாயில் குத்த முயற்சிக்கும் செயல் விசித்திரமாக உள்ளது. அவரது கையை முதலை தன் வாயால் கவ்வி இருந்தால், அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே பீதியாக உள்ளது.


இந்த விசித்திரமான வீடியோ ட்விட்டரில் @HumanAreMetal என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.   


மேலும் படிக்க | எப்புட்றா..ஆற்றில் அசால்டாக பைக் ஓட்டும் நபர்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ