'ஒண்ணுகூட நல்லா இல்லையே!!’: மொபைல் பார்த்து மாஸ் காட்டும் குரங்கு, வைரல் வீடியோ

Funny Monkey Video: மிக அசால்டாக மொபைல் போனில் வீடியோ பார்க்கும் குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2023, 04:34 PM IST
  • வீடியோவில், ஒரு செல்ல குரங்கு, அழகாக உடையணிந்து மொபைல் பார்ப்பதையும், அதன் அருகில் ஒரு பெண் படுத்திருப்பதையும் காண முடிகின்றது.
  • அந்தப் பெண் குரங்கைப் பார்த்தபடி படுக்கையில் படுத்திருக்கிறார்.
  • குரங்கு மொபைல் போனில் ஒவ்வொரு வீடியோவாக பார்த்துக்கொண்டு இருக்கிறது.
'ஒண்ணுகூட நல்லா இல்லையே!!’: மொபைல் பார்த்து மாஸ் காட்டும் குரங்கு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

 சமூக ஊடகங்களில் தினமும் விலங்குகளின் பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றில் பாம்பு, குரங்கு, நாய், பூனை, யானை என இந்த விலங்குகளுக்கு மவுசு அதிகம். இவற்றின் வீடியோக்கள் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகின்றன. 

தற்போதும் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஒரு வீடியோ ஈர்த்துள்ளது. இது ஒரு வேடிக்கையான வீடியோவாக இருந்தாலும், இதிலிருந்து கற்றுக்கொள்ளவும் பல விஷயங்கள் உள்ளன. ஒரு குரங்கு போனில் வீடியோக்களை பார்ப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. நம்மில் பலர் இப்படி நமது மொபைல் போன்களில் மூழ்கி இருப்பதை நாம் அதிகம் பார்த்துள்ளோம். ஆனால், இந்த பழக்கம் மிருகங்களுக்கும் வருவது மிக வேதனையாக உள்ளது. இந்த வீடியோவை முதலில் CanvasM சிஇஓ பகிர்ந்தார்.

போன் பார்க்கும் குரங்கு

வீடியோவில் , ஒரு செல்ல குரங்கு, அழகாக உடையணிந்து மொபைல் பார்ப்பதையும், அதன் அருகில் ஒரு பெண் படுத்திருப்பதையும் காண முடிகின்றது. அந்தப் பெண் குரங்கைப் பார்த்தபடி படுக்கையில் படுத்திருக்கிறார். குரங்கு மொபைல் போனில் ஒவ்வொரு வீடியோவாக பார்த்துக்கொண்டு இருக்கிறது.

சில வீடியோக்களை ஆர்வத்துடன் பார்க்கும் குரங்கு, சிலவற்றை பிடிக்காமல் அப்படியே ஸ்க்ரோல் செய்து விடுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த மகிந்திரா, ‘இந்த அப்பாவி குரங்கை ‘மனிதகுலத்திடமிருந்து’ காப்பாற்றுங்கள்’ என எழுதியுள்ளார். மனிதர்களின் தீய பழக்கங்கள் விலங்குகளுக்கும் ஒட்டிக்கொள்வது அவருக்கு பிடிக்கவில்லை என்பது இத்லிருந்து தெரிகிறது.

மேலும் படிக்க | தலை இல்லாமல் பயங்கரமாய் தாக்கிய பாம்பு: ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

அசால்டாய் மொபைல் போன் பார்க்கும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ வைரலாகி ஏகப்பட்ட லைக்குகளையும் வியூஸ்களையும் குவித்து வருகிறது.  இணையவாசிகளின் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | என்னடா வயித்துக்குள்ள..நடுரோட்டில் தவிக்கும் 20 அடி மலைப்பாம்பு..வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News