நொடியில் நகையை அபேஸ் செய்த ஆண்டி: கூலா ஒரு கொள்ளை, வைரல் வீடியோ
Theft Viral Video: இப்படி கூலான ஒரு கொள்ளையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. சிசிடிவி காட்சிகளை கண்ட கடைக்காரருக்கு கிடைத்த அதே ஷாக் நமக்கும் கிடைக்கிறது.
வைரல் வீடியோ: திருட்டுச் சம்பவங்கள் நடக்கும்போது பொருட்கள் மட்டும் திருடப்படுவதில்லை. நம்பிக்கை, நல்லொழுக்கம், நியாயம் என அனைத்தும் களவாடப்படுகின்றன. திருடுபவர்கள் முகத்தில் திருடன் என்று எழுதப்பட்டிருப்பதில்லை. பலமுறை உண்மை வெளிவரும் போது, மக்கள் திகைத்துதான் போகிறார்கள். திருட்டில் ஈடுபடும் நபர்கள் அதிக அளவு புத்திசாலித்தனத்தை பயன்படுத்துகிறார்கள். எனினும், இன்றைய காலகட்டத்தில் திருடர்களைப் பிடிப்பது முன்பை விட சற்று சுலபமாகிவிட்டது.
பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால், திருடர்களை அடையாளம் காண்பது மிக எளிதாகி விடுகிறது. எனினும், இந்த காட்சிகளை பார்க்கும் போது பலமுறை நம்மால் நம்ப முடியாத ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் பதிவானதாக கூறப்படுகின்றது. இதில் ஒரு பெண், பக்காவாக களவாடுவதை காண முடிகின்றது.
கருப்பு கண்ணாடி அணிந்து களவாடிய பெண்மணி
சமீர் அப்பாஸ் என்ற பயனர் ட்விட்டரில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பெண் ரூ 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடும் காட்சிகள் வெளிவந்துள்ளன. இந்த வீடியோவைப் பார்த்து லட்சக்கணக்கான பயனர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். நகைக் கடையில் ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அந்த பெண்ணின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.
மிக லாவகமாக அந்த பெண் நகையை சேலைக்குள் மறைத்து வைத்து எடுத்துக்கொண்டு செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த அதிர்ச்சியான சம்பவத்தை கடைக்காரர் கண்முன்னே பெண் செய்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். கடையின் சிசிடிவி கேமராவில் சேலை அணிந்த வயதான பெண் நகைகளை மறைத்து வைத்தது எடுத்துச்சென்றது படம் பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நவம்பர் 17 அன்று நடந்தது.
அனைவர் கண்களுக்கும் முன்னால் 10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமானது
உ.பி., மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு ஷோரூமில், உண்மையான வாடிக்கையாளர் போல் நடித்து, பெண் ஒருவர் நுழைந்தார். மற்ற வாடிக்கையாளர்களைப் போலவே அவரும் உள்ளே சென்று கடையின் கவுண்டர் முன் அமர்ந்தார். அவர் கேட்கும் நகைகளை விற்பனையாளர் காட்டத் தொடங்குகிறார். இரண்டு நகைப்பெட்டிகளை தன் முன்னால் வைத்து பார்க்கும் அந்த பெண், ஒரு பெட்டியை மூடுவதை வீடியோவில் காண முடிகின்றது. திறந்திருக்கும் மற்றொரு பெட்டியை மூடிய பெட்டியின் மீது வைக்கிறார் அந்த பெண். பின், மெதுவாக மூடிய பெட்டியை இழுத்து தனது சேலைக்குள் மறைத்துக்கொள்கிறார். நகைப்பெட்டியை மறைக்கும் வரை, பல நகைகளை பார்ப்பது போலவும் அதில் சில தங்க நெக்லஸ்கள் பிடிக்காதது போலவும் அவர் பாசாங்கு செய்கிறார்.
இதற்குப் பிறகு கறுப்புக் கண்ணாடி அணிந்த பெண், கடையில் இருந்த நகைகள் தனக்கு பிடிக்காதது போல பாசாங்கு செய்துவிட்டு எழுந்து சென்றுவிடுகிறார். ஷோரூமில் பரபரப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த கடைக்காரர்களுக்கு திருடிய அந்த பெண் மீது சந்தேகம் வரவில்லை. நகைப் பெட்டி காணாமல் போனதைக் கூட ஊழியர்கள் கவனிக்காததால் அந்தப் பெண் தப்பிச் சென்று விடுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | இஞ்சி தின்ற குரங்கை பார்த்திருக்கிறீர்களா? இந்த வைரல் வீடியோல பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ