பாகிஸ்தானின் (Pakiistan) கராச்சி நகரில் சுமார் 12 மணி நேரம் நீடித்த மின்சார தடை காரணமாக  அந்த நகரமே முடங்கியுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு பல இடங்களில் தொடர்ந்து ஏற்படுவதாகவும், சில முக்கிய பகுதிகளீல் கூட ஆறு மணி நேரம் வரை மின் தடை நீடிக்கிறது எனவும் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில், கடுமையான வெப்பம் நிலை காரணமாக, பல பகுதிகளில் மக்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வோல்டேஜ் மாறுபாட்டினாலும் மோட்டார்கள்  எரிந்து விடுவதாக புகார் அளித்துள்ள மக்கள், மோட்டரையும் மாற முடியாத நிலையில் உள்ளதாக குமுறுகின்றனர்.  இதற்கிடையில், கராச்சியின் மின் நிறுவனமான கே-எலக்ட்ரிக் (K-Electric), நிலைமை மேம்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. கராச்சியில் அறிவிக்கப்படாத மின் தடை ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது. 


இருப்பினும், பழுதுபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள் சரி செய்கிறோம்  என்ற சாக்கு போக்கு கூறி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், கே-எலக்ட்ரிக் நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.


கடந்த வாரம், வர்த்தகர்கள் அடிக்கடி மின் முறிவு காரணமாக தங்கள் வணிகங்கள் சரிந்துவிட்டதாக புகார் கூறினர். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடிக்கடி மற்றும் நீடிக்கும் மின்வெட்டுகள் தங்கள் ஆன்லைன் வகுப்புகளை பாதித்ததாகக் கூறினர்.


ALSO READ | வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்


லாக்டவுன் (Lockdown) உத்தரவுகள் மற்றும் மின் தடை காரணமாக வேலை நேரம் மற்றும் வணிக நடவடிக்கைகள் என்பதை கராச்சி மின்னணு பொருட்கள் விற்பனை சங்கத் தலைவர் ரிஸ்வான் இர்பான், தி நியூஸ் இன்டர்நேஷனலுடன் பகிர்ந்து கொண்டார்.


"மின்சாரம் இருந்தால் தான், எங்கள் மின்சார உபகரணக் கடைகளில் வாடிக்கையாளர்கள் வருவார்கள்," என்று அவர் கூறினார், மதியம் 12 மணி அல்லது பிற்பகல் 1 மணியளவில் கடைகள் திறக்கப்ப்படுகின்றன, மேலும் லாக்டவுன் உத்தரவுகளால் மாலை 6 மணிக்குள் அவற்றை மூட வேண்டியுள்ளது. இந்த குறைந்த நேரத்தில் கூட மின் தடை என்றால் என்ன செய்வது என புலம்புகின்றனர்


"ஆறு மணி நேர திறந்திருக்கும் எங்கள் நிறுவனங்கள் மற்றும் கடைகளில், எங்களுக்கு குறைந்தபட்சம் நான்கு மணிநேர மின் தடை உள்ளது. இது இந்த பருவத்தில் நாங்கள்  வழக்கமான வருமானத்தில்,  10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதம் வரை மட்டுமே எவருமானம் கிடைக்கிறது," என்று வர்த்தகர்கள் கூறினர்.


ALSO READ | நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை;  அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR