குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை: ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தார் டெல்லி முதல்வர்

டெல்லியில், அதிகப்படியான தொற்று எண்ணிக்கையுடன் மிகவும் தீவிரமான நிலையில்  இருந்த கொரோனா தொற்று பரவல் ஊரடங்குக்குப் பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை பெரும்பாலும் கட்டுக்குள் வந்துவிட்டது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 5, 2021, 01:08 PM IST
  • டெல்லியில் கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தார் அர்விந்த் கெஜ்ரிவால்.
  • டெல்லி மெட்ரோ 50% திறனுடன் இயங்கும்.
  • தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை: ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தார் டெல்லி முதல்வர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்துகொண்டு இருக்கிறது. முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த பல மாநிலங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் டெல்லியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிப்பது குறித்து சற்று முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் பத்திரிக்கையாளர் சந்திப்பை மெற்கொண்டார்.

டெல்லியில் (Delhi Lockdown), அதிகப்படியான தொற்று எண்ணிக்கையுடன் மிகவும் தீவிரமான நிலையில்  இருந்த கொரோனா தொற்று பரவல் ஊரடங்குக்குப் பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை பெரும்பாலும் கட்டுக்குள் வந்துவிட்டது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமையன்று அடுத்த வாரம் முதல் ஊரடங்கில் பல தளர்வுகளைப் பற்றி அறிவித்தார். 

"டெல்லியில் ஊரடங்கு தொடரும். எனினும் பல இடங்களில் பல தளர்வுகள் அளிக்கப்படும். சந்தைகள், மால்கள் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் ஆட்-ஈவன் முறையில் இயங்கும்." என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தெரிவித்தார். டெ.ல்லி மெட்ரோவும் 50% திறனுடன் திறக்கப்படும் என அவர் மேலும் கூறினார். 

டெல்லி முதல்வர் அறிவித்த ஊரடங்குத் தளர்வுகளில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- ஏற்கனவே கட்டுமானப் பணிகளுக்கு சென்ற வாரம் அனுமதி வழங்கப்பட்டது. இப்போது இன்னும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ALSO READ: கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகி வருகிறோம், அதிக தடுப்பூசிகள் தேவை: டெல்லி முதல்வர்

- சந்தைகள் மற்றும் மால்களில் உள்ள கடைகள் ஆட்-ஈவன் முறையில் திறக்கப்படும். (ஒரு கடை விட்டு ஒரு கடை திறக்கப்படும்)

- தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

- அரசு அலுவலகங்களில் குருப் A ஊழியர்கள் 100 சதவிகிதத்துடனும், குருப் B ஊழியர்கள் 50 சதவிகிதத்துடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

- டெல்லி மெட்ரோ 50% திறனுடன் இயங்கும். 

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள் என அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார். கோவிட் -19 இன் மூன்றாவது அலையை எதிர்கொள்ள டெல்லி அரசு தயாராக உள்ளது என்றும், அதற்காக குழந்தைகளுக்காக பிரத்யேகமாக குழந்தை பணிக்குழுவையும் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனாவின் புதிய வகைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றை கண்டறியவும் இரண்டு மரபணு வரிசைமுறை ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்தார்.

"COVID-19 இன் மூன்றாவது அலை வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குள் 420 டன் ஆக்ஸிஜன் சேமிப்பு திறனை தயார் செய்து வருகிறோம். 150 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய இந்திரபிரஸ்தா கெஸ் லிமிடெடிடம் நாங்கள் பேசியுள்ளோம்" என்று கெஜ்ரிவால் மேலும் கூறினார்.

ALSO READ: https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extended-in-tamil-nadu-till-june-14-announces-cm-mk-stalin-364371

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News