வைரல் வீடியோ: இந்தியா பல வித பருவமாற்றங்களை கொண்ட நாடு. ஓர் இடத்தில் வெயில் வாட்டி வதைக்கும் அதே நேரம், இங்கு ஒரு இடத்தில் குளிரால் மக்கள் நடுங்கிக்கொண்டு இருப்பார்கள். சில இடங்களில் மழை வெளுத்து வாங்கும், சில இடங்களில் தூரலுக்காக பூமி காத்திருக்கும். உதாரணமாக, வணிக தலைநகராக இருக்கும் மும்பையில், சாலைகளில் மக்கள் நீச்சல் அடிக்கும் அளவுக்கு மழை பெய்யும். ஆனால், நாட்டின் தலைநகரான டெல்லியில் மழையின் அளவு மிகவும் குறைவு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகையால், டெல்லியில் வசிப்பவர்கள் பெய்யும் சிறிய அளவு மழையை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். ஆனால், டெல்லி, மும்பை அல்லது வேறு எந்த நகரமாக இருந்தாலும், இந்தியர்கள் மழைக்காலத்தை விரும்புகிறார்கள். மழையில் பலர் நடனமாடும் காட்சிகள் இந்திய திரைப்படங்களிலும் காணப்படுகின்றன. ஆனால், மழையை கண்டால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் குஷிதான்.


இதற்கு சான்றாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. டெல்லியில் ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ஒன்று மழை பெய்ததும் உற்சாகமானது. அது தன்னை மறந்து மழையில் நனைந்து கொண்டாடியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'whiskeyysyal' என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. வீடியோவை பகிர்ந்த அவர், 'மழையில் நடனமாட காத்துக்கொண்டிருக்கிறேன்....' என நாயின் சார்பில் எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | ‘என் ஏரியா, உள்ள வராத’: கோபத்துடன் துரத்திய யானை, பீதியில் பயணிகள், வீடியோ வைரல் 


இந்த இன்ஸ்டாகிராம் ரீல் 3.2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 351k லைக்குகளையும் பெற்று வைரலாகியுள்ளது. கிளிப்பில், வீட்டு உரிமையாளர் தங்கள் வீட்டு கதவை திறந்தவுடனேயே நாய் உற்சாகமாக மாடிக்கு ஓடி, ஆசையாக மழையில் ஆட்டம் போடுவதை காண முடிகின்றது. 


இந்த கியூட்டான நாய் முதலில் வீட்டை விட்டு வெளியேறி, மொட்டை மாடியின் கதவை வேகமாக தட்டுகிறது. அதன் பிறகு கதவு திறக்கப்பட்டவுடன் வாலை ஆட்டிக்கொண்டே மகிழ்ச்சியுடன் மொட்டை மாடிக்குள் நுழைகிறது. மொட்டை மாடிக்குள் ஓடும் நாய், அங்கு மழை பெய்வது கண்டு மகிழ்ச்சியின் உச்சிக்கு செல்கிறது. மழையால் ஏற்பட்ட மகிழ்ச்சி நாயின் ஆட்டம், ஓட்டம், அசைவுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. வீடியோவின் பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ள 'லகான்' ஹிந்தி பட பாடல் நாயின் ஆட்டத்துக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.


மொட்டை மாடியில் மாஸ் நடனம் ஆடும் நாயின் நடனத்தை இங்கே காணலாம்: 



இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். மழையில் குஷியாக நனையும் நாயை பார்க்க ஆசையாக இருப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | காதல் செய்யும் பாம்புகள்; இப்படி ஒரு காட்சியா: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ