உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 5 ஜி சோதனை பல உயிர் பலிகளை ஏற்படுத்தியுள்ளது என்ற ஆடியோ செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 ஜி சோதனையால் வெளியிடப்படும் கதிர்வீச்சு இந்தியாவில் COVID-19 இன் இரண்டாவது அலை பெருமளவில் பரவ வழிவகுத்தது என்ற செய்தியின் உண்மைத்தன்மையை கண்டறியும் சோதனையை PIB செய்தி முகமை மேற்கொண்டது. அதில், இந்த செய்தி போலி செய்தி (Fake News) என்று தெரியவந்தது.


"ஒரு ஆடியோ செய்தியில், 5 ஜி நெட்வொர்க் மாநிலங்களில் சோதனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது, இதன் காரணமாக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆடியோவில் கூறப்படுகிறது. இந்த தகவல் போலியானது. தயவுசெய்து இதுபோன்ற போலி செய்திகளைப் பகிர்ந்து குழப்பத்தை பரப்ப வேண்டாம்" என்று பிஐபி ஒரு ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.


Also Read | MS Dhoniயிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்; கார் முதல் குதிரை வரை… 


உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 5 ஜி சோதனை பல இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஒரு ஆடியோ செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்காளத் தேர்தல் காரணமாக, அரசாங்கம் அங்கு சோதனைகளைத் தொடங்கவில்லை, மாறாக மும்பை, மகாராஷ்டிராவிலிருந்து தொடங்கத் தெரிவுசெய்தது என்று அந்த ஆடியோ செய்தி கூறுகிறது.


முன்னதாக தொலைத் தொடர்புத் துறை அமைப்பான இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் (Cellular Operators Association of India (COAI)), கோவிட் -19 பரவுவது மற்றும் 5 ஜி தொழில்நுட்பம் தொடர்பான வதந்திகள் குறித்து கவலை தெரிவித்தது.


Also Read | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PMK தலைவர் டாக்டர் ராமதாஸிடம் தொலைபேசியில் வாழ்த்து 


வெள்ளிக்கிழமையன்று இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) மற்றும் டவர் மற்றும் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் (TAIPA) ஆகியவை 5G தொழில்நுட்பத்தை COVID-19 பரவலுடன் இணைக்கும் தவறான வதந்திகள் குறித்து, தங்கள் கவலையை வெளிப்படுத்தின.


5 ஜி தொழில்நுட்பத்திற்கும் COVID-19 க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) தெளிவுபடுத்தியுள்ளது என்று COAI இயக்குநர் ஜெனரல் எஸ்.பி. கோச்சார் (SP Kochhar) தெரிவித்தார்.


Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR