Python vs Mongoose: சண்டைன்னு வந்துட்டா தராதரம் கிடையாது: சீறும் பாம்பிடம் அடங்கும் கீரி
சீறி படமெடுத்து, விஷத்தால் தாக்கும் பாம்பு, சட்டென்று எதிர்வினையாற்றும் கீரியை அழுத்தி வேட்டையாடும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
பாம்பு வைரல் வீடியோ: காடுகளில் ஆபத்தான விலங்குகள் நிறைந்துள்ளன. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை. சிறிய விலங்குகளில் சில, மிகப் பெரிய இரைகளையும் எளிதாக கட்டுப்படுத்தி விடும். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்னும் பழமொழியை உண்மையாக்குகின்றன விலங்குகள்.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருவதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. அப்படியொரு பாம்பு-கீரி வீடியோ சுவாரசியமானதாக இருப்பதால், இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயற்கையாகவே கீரியும் பாம்பும் எதிரிகள் என்றே கருதப்படுகின்றன. கீரிகள் பாம்பு முட்டைகளை உண்கின்றன. பாம்புகள் கீரியின் குட்டிகளை உண்கின்றன.
கீரிகள், தங்கள் கூடுகளைக் குறிபார்க்கும் பாம்புகளை எதிர்த்துத் தாக்குகின்றன என்று சொன்னாலும், உணவுக்காகவும் இரண்டும் மோதிக் கொள்கின்றன.
மேலும் படிக்க | ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கிய பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள்
ஆனால், சண்டை என்று வந்துவிட்டால், நான் உனக்கு சளைத்தவன் அல்ல என்று இரண்டும் மோதிக் கொள்வதைப் பார்த்தால் பயமாக இருக்கும். சீறி படமெடுத்து, விஷத்தால் பாம்பு தாக்கும் என்றால், சட்டென்று எதிர்வினையாற்றும் கீரி, கூரிய பற்களாலும் நகங்களாலும் போரிடும்.
கீரிகளின் மயிர்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பதனால் அவற்றின் முடிகளைக் கடந்து பாம்பின் பல், எதிரியின் உடலை எட்டாது என்பதால் தான், நஞ்சைக் கக்கும் நாகப்பாம்பையும் கீரியால் க்கொல்ல முடிகிறது.
ஆனால், கீரியை பாம்பின் நஞ்சு தீண்டிவிட்டால்? கீரியின் கதி அதோகதி தான்...
அதனால் தானோ என்னவோ இந்த வைரல் வீடியோவில், பாம்பு கீரியை தனது அடியில் போட்டு அழுத்துகிறது. உண்மையில் கீரி எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. அதனுடைய இருப்பே, அதன் வால் ஆடுவதால் தான் தெரிகிறது.
மேலும் படிக்க | பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர்
போட்டுத் தாக்கு என்று சொல்வதுபோல, பாம்பு, இந்த கீரியை போட்டுத் தாக்கியிருந்தாலும், அது தனது பலத்தால் செய்கிறது, தனது நஞ்சால் அல்ல.
இன்னும் சில நிமிடங்கள் இதே நிலையில் கீரி இருந்தால், அது பாம்பின் விஷத்தால் அல்ல, அதன் அழுத்தமான பிடியினாலேயே இறந்து போய்விடும் என்பதும் தெரிகிறது.
இந்த பாம்பின் வேட்டை வீடியோவை இவ்வளவு அருகில் இருந்து படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இணையவாசிகள், இந்த பாம்பு வீடியோவை பார்த்து, ரசித்து பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
பொதுவாக, நஞ்சு கடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் கீரிப்பிள்ளைகள், முன்னும் பின்னும் தாவிக்குதித்து பாம்புகளைக் களைப்படைய வைக்கும் முயற்சிகளைச் செய்யும் என்று சொல்வார்கள்.
அதனால்தானோ என்னவெ, இந்த புத்திசாலி பாம்பு, தன்னை களைப்படைய வைக்க இடம் கொடுக்காமல், தனது இரையை, தன்னுடைய கால்களுக்கு இடையில் சிக்க வைத்துவிட்டது.
இரையை அழுத்திய பாம்பு, வீடியோவுக்கு போஸ் கொடுப்பது போலவே தோன்றுகிறது. உண்மையில் இதுபோன்ற வீடியோக்கள், இயற்கையில் நடைபெறும் தளவாடங்களும் ஆயுதங்களும் அற்ற சண்டையை நமக்கு காட்டுகின்றன.
மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR