Viral Video Of Cobra: இயற்கையின் படைப்புகள் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பது ஆச்சரியமல்ல என்றாலும், சில சமயங்களில் திகைப்பையும் ஏற்படுத்துகின்றன. ஓரறிவுள்ள உயிரினங்கள், புழு, பூச்சிகள் தொடங்கி மனிதர்கள், மிகப் பெரிய விலங்குகள் என இயற்கை  நம்மை வியக்கவைக்கிறது. இயற்கையின் படைப்புகளை பார்க்கும்போது எவ்வளவு வியப்பாக இருக்கிறதோ அதைவிட அதிகமாக ஆச்சரியமூட்டுவது தொழில்நுட்பங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயிரினங்களின் செயல்பாடுகளும் நடந்து கொள்ளும் விதங்களும் நித்தம் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொடுக்கின்றன என்பதோடு, ஆச்சர்யத்தையும் மாற்றத்தையும் உணரச் செய்கின்ரான. இயற்கையின் படைப்பின் விசித்திரங்களை அவ்வப்போது பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.  


மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?


அப்படியொரு விஷயம் தான் இங்கு நடந்திருக்கிறது, இயற்கையாகவே இரண்டு தலையுடன் பிறந்த பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இயற்கையின் படைப்பு அதிசயமானது என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 



அந்த வீடியோவில் அழகான மஞ்சள் நிறப் பாம்பு ஒன்றை ஒருவர் கையில் வைத்திருக்கிறார். அந்த வைரல் வீடியோ, சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.


பாம்புக்கு பல் இருக்கிறதா? பாம்பு பால் குடிக்குமா, பாம்பா பழுதா என பாம்பைப் பற்றிய பல்வேறு கேள்விகளையும் சொலவடைகளையும் கேட்டிருக்கும் உங்களுக்கு, இந்த வீடியோவைப் பார்த்ததும் புதிய சொலவடையை நீங்களே உருவாக்கிவிடுவீர்கள். 


மேலும் படிக்க | Viral Video: தண்ணிக்குள்ளயும் லந்து பண்ணுவியா? ஆச்சரியம் ஏற்படுத்தும் ஜாகுவார்


அந்த வீடியோவில் இருக்கும் பாம்பின் தலை இரண்டாக இருக்கிறது. ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்று இதை சொல்லிவிட  முடியுமா? முடியாது. ஏனென்றால் ஈருடல் ஓருயிர் என்று சொல்வதைப் போல இருந்தால் பரவாயில்லை, இது ஓருடல் ஈருயிர் என்று தோன்றுகிறது. இந்த உவமானம் காதலுக்கு சொல்லும் உவமானம் என்று நினைத்துவிட வேண்டாம், இது இந்த ‘பாம்பிற்கு’ மட்டுமே சொல்லப்பட்ட உவமானம்.


இரட்டைத் தலையுடன் இருக்கும் இந்த  பாம்பு, பார்க்கவும் அழகாக இருக்கிறது. பார்க்க அழகாக இருப்பதால், அதற்கு விஷம் இருக்காதா என்ன? அழகாய் இருந்தாலும், இரட்டை தலையுடன் உலக சாதனை புரிந்த பாம்பாக இருந்தாலும், கொத்தினால் விஷம் தான்...  


மேலும் படிக்க | ‘மாமா.. என்ன ஏமாத்திட்டீங்களே!’: திருமணத்தில் வந்த காதலி, முழித்த மணமகன், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ