‘மாமா.. என்ன ஏமாத்திட்டீங்களே!’: திருமணத்தில் வந்த காதலி, முழித்த மணமகன், வைரல் வீடியோ

Funny Viral Video: திருமணத்தில் நடந்த ஒரு திடீர் சம்பவம் மணமக்களையும், அங்கு வந்திருந்த விருந்தினர்களையும் கதிகலங்க வைக்கிறது. இதன் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 2, 2023, 02:49 PM IST
  • சமூக வலைதளங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • எனினும், இவற்றில் சிலவற்றை மட்டுமே பயனர்கள் மிகவும் விரும்பி வைரலாக்குகிறார்கள்.
  • தற்போது ஒரு வேடிக்கையான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
‘மாமா.. என்ன ஏமாத்திட்டீங்களே!’: திருமணத்தில் வந்த காதலி, முழித்த மணமகன், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக வலைதளங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. எனினும், இவற்றில் சிலவற்றை மட்டுமே பயனர்கள் மிகவும் விரும்பி வைரலாக்குகிறார்கள். தற்போது ஒரு வேடிக்கையான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ மணமக்கள் தொடர்பானது. அதில் மணமக்கள் ஆடிப்போகும் அளவுக்கு நடக்கும் ஒரு விஷயம் அனைவரையும் முதலில் திடுக்கிட வைத்து பின்னர் சிரிக்க வைக்கின்றது. 

மணமகனின் நண்பர்கள் ஆடிய விபரீத விளையாட்டு 

வைரலாகி வரும் சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவின் தொடக்கத்தில், கல்யாணம் ஆன பிறகு, மணமக்கள் டைனிங் டேபிளில் அமர்ந்து ருசியான உணவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. அப்போது வீடியோவில் அனைத்தும் சாதாரணமாக தெரிகிறது. ஆனால், திடீரென அந்த இடமே களேபரமாகிறது. 

கருப்பு நிற புர்கா அணிந்த பெண் திடீரென அங்கு வருகிறார். அவர் மாப்பிள்ளையை கட்டிப்பிடித்து அழுத் தொடங்குகிறார். ஒரு பெண் மணமகனுடன் இப்படி நடந்துகொள்வதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். மணமகனின் அருகில் அமர்ந்திருந்த மணப்பெண்ணை பற்றி கேட்கவே வேண்டாம். அவர் அச்சத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார். அவருக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. 

ஆனால் சிறிது நேரம் கழித்து, அனைத்தும் தெளிவாகிறது. உண்மை தெரிந்தவுடன் அனைவரும்  சிரிப்பதை நிறுத்தினர். உண்மையில், மாப்பிள்ளையை கட்டிப்பிடித்த புர்கா அணிந்த பெண் வேறு யாருமல்ல, அவருடைய நண்பர்தான். தங்கள் நண்பனின் திருமணத்தில் இப்படி அவரை திடுக்கிட வைக்க திட்டமிட்டு இவர்கள் இதை செய்துள்ளது பின்னர் தெரியவந்தது. முழு விஷயத்தையும் புரிந்து கொண்ட பிறகு, மணமகளும் வாய்விட்டு சிரிக்கத் தொடங்குகிறார். இங்கே மாப்பிள்ளையாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மேலும் படிக்க | 10 அடி நீள பாம்பின் மேல் எலியும் மற்றும் தவளையும்..வீடியோ வைரல் 

வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்: 

 

மணமக்கள் பற்றிய இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் பல தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இது இன்ஸ்டாகிராமில் ashiq.billota என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை சுமார் ஒரு லட்சம் வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | அடர்ந்த காட்டில் ஒளிந்திருக்கும் தவளை; 10 நொடியில் கண்டுபிடித்தால் கில்லாடி தான்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News