கோபம் வந்தா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்... கடுமையாய் தாக்கும் புலி வீடியோ வைரல்
Google Trending Video: காட்டு வாழ்க்கயில் இதெல்லாம் சகஜமப்பா! கண்டுக்காதீங்க.... இது சிங்கத்தோட கமெண்டா இருந்தாலும் புலி அதை ஒத்துக்குமா? வைரலாகும் சிங்கம் புலி மோதல் வீடியோ
இன்றைய வைரல் வீடியோ: இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தையும் டென்ஷனையும் எதிர்கொள்கின்றனர். வாழ்க்கைப்போக்குக் மாறிவிட்டது என்று சொன்னாலும், அதை போக்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பிரச்சனை ஏற்படும். அதற்கு இன்று சமூக ஊடகங்கள் நமக்கு உதவியாக இருக்கின்றன. பொழுது போக்கும் சுவாரசியமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்து, ரசித்து மக்கள் தங்கள் டென்ஷனை போக்கிக் கொள்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதிலும், விலங்குகளின் வீடியோக்களுக்கு இணையத்தில் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் என்ன? நம்மால் நேரடியாக சென்று பார்க்க முடியாத நிகழ்வுகளையும் இடங்களான காடு மற்றும் அதில் வசிக்கும் உயிரினங்கள் தொடர்பான ஆர்வம் அனைவருக்கும் உண்டு.
நமக்கு நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்காத இடங்களை, சமூக வீடியோக்கள் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதால் அவற்றுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. விலங்குகளில், காட்டு விலங்குகள், பறவைகள் செல்ல பிராணிகள் என அனைத்து உயிரினங்களின் பாச வீடியோக்களும், மோதல் வீடியோக்களும் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகின்றன.
மேலும் படிக்க | அணகோண்டா பாம்பிடம் சரமாரியாக கடிவாங்கிய நபர்; வைரல் வீடியோ
வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை என சாதாரணமான வீட்டு விலங்குகளின் வீடியோக்கள் முதல், காட்டு விலங்குகளின் சில்லறை காமெடி வரை, பலதரப்பட்ட விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகின்றன. வீடியோக்கள் பலரையும் கவர்வதற்கான காரணம் என்ன?
சிங்கம், புலி, சிறுத்தை, யானை என்று நாம் நெருங்கவே பயப்படும் விலங்குகளை அருகில் க்ளோசப் ஷாட்டில் பார்க்கவும், அவர்களின் மோதலை, டீடெய்லாக பார்க்க வாய்ப்பு கிடைத்தால் யாருக்கு தான் பிடிக்காது.
இன்று சமூக ஊடகங்களில் வைரலாகும் மோதல் வீடியோக்களில் முதலிடத்தை பிடிக்கிறது, சிங்கத்துக்கும் புலிக்கும் இடையிலான மோதல் வீடியோ.
இந்த வீடியோவில் வனத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சிங்கம் மற்றும் புலி இயல்பாக இருப்பது போல தோன்றுகிறது. ஆனால், சில நொடிகளில் இரண்டும் அருகில் வந்து, ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்கின்றன. இந்த வீடியோவை பார்க்கும் போது முதலில் பகீர் என்று பயமாக இருந்தாலும், அவற்றை சுற்றி இருக்கும் விலங்குகள், இதை இயல்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போது, இது போன்ற சண்டைகள் விலங்குகளுக்கு இடையில் சகஜம் தன் என்பது புரிகிறது.
ஆனால், இப்படி ஒரு வீடியோவை பார்க்கும் போது, நாம் திரும்பத்திரும்ப பார்த்து மோதலின் வீரியத்தைப் பார்க்கிறோம். ஆனால், சண்டை போடுவது எங்கள் வாடிக்கை, கூல் மச்சி என்று நமக்கு சொல்வதுபோல, கூட இருக்கும் சக விலங்குகள் இருப்பதைப் பார்க்கும்போது, காட்டு வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா என்று தோன்றுகிறது.
சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வீடியோக்கள் நம் மனதை மிகவும் கனமாக்கிவிடும். இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ, வன வாழ்க்கையின் சில இயல்பான மோதல்களை நமக்கு புரிய வைக்கிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கத் தொடங்கிவிட்டால், இப்படி பல கோணங்களிலும் விலங்குகளின் இயல்பு புரிகிறது.
மேலும் படிக்க | பாம்பை கைமா பண்ணத் துடிக்கும் முதலை! உன்னை பிரியாணி போடறேன்! சீறும் பாம்பு
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ