புதுடெல்லி: கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்… என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். அது உண்மை என நிரூபிக்கும் சம்பவம் இது. படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனிமைக்கு துணையாக நாய் ஒன்றை வளர்க்க முடிவு செய்தார். நாய் ஒன்றை கொண்டு வந்து ஆசை ஆசையாக வளர்க்கத் தொடங்கினார். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, நாயின் சாயம் வெளுத்து போய் எலியாகிவிட்டது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசித்திரமான சம்பவம் 


தான் ஏமாந்த கதையை ஏமாளியான நபரே சமூக ஊடகங்களில் (Social Media) வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தை ஷாங்காய் போஸ்ட் (Shanghai Post) செய்தியாக வெளியிட்டுள்ளது. இனிமேல் யாரும் ஏமாற வேண்டாம் என்பதற்காக அந்த நபர் விசித்திரமான விலங்கின் வீடியோவை வெளியிட்டார். அந்த விலங்கை அடையாளம் கண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


Also Read | Wheelchairஇல் 250 மீட்டர் உயர கட்டடத்தில் ஏறி சாதனை படைத்த Lai Chi-wai 


நாய்க்கு பதிலாக எலி


சோஷியல் மீடியாவில் இந்த மிருகத்தைப் (Animal) பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த விலங்கின் வடிவம் ஒரு நாயின் வடிவத்தை ஒத்திருந்தது. இதன் பின்னர், மக்கள் அதை அடையாளம் தெரிந்துக் கொண்டனர். நாய் என்று நம்பிய விலங்கு உண்மையில் மூங்கில் எலி என்று சமூக ஊடகங்களில் சிலர்   கூறினார். இந்த எலி மூங்கிலை மட்டுமே சாப்பிடுகிறது.


நண்பர் வீட்டில் இருந்து நாயை கொண்டு வந்தார்  
சீனாவைச் சேர்ந்த இந்த நபர் மலைப்பகுதியில் அமைந்துள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றார். அங்கே அவர் நண்பரின் வீட்டிற்கு வெளியே ஒரு கருப்பு நாய் (Black Dog) இருப்பதைக் கண்டார். அவர் நாயை பார்த்து மிகவும் ஆசைப்பட்டு விரும்பி தனது வீட்டிற்கு கொண்டு வந்தார்.


ஆனால் இந்த கெட்டிக்காரனின் உருவம் மூன்று நாட்களுக்கு பிறகு அம்பலமாகிவிட்டது. தனது வீட்டிற்கு வந்த பிறகு தான் அது ஒரு நாயைப் போல ஓடவில்லை என்பதை கவனித்தார் சீனர். அதேபோல் அந்த விலங்கின் தலைமுடி நாய்க்கு இருப்பது போல இல்லை என்பதையும் கவனித்தார். அதன்பிறகு தான் அந்த மனிதன் இந்த விசித்திரமான விலங்கின் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.


Also Read | WORLD'S DIRTIEST மனிதன்! 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா? 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR