உலக சாதனைகளை படைக்க மனிதர்கள் அனைவருக்கும் ஆவல் இருக்கலாம். அதிலும் மிக உயரமான கட்டடங்களை வித்தியாசமாக ஏறி சாதனை செய்பவர்கள் பிரபலமாவார்கள். ஆனால், ஒரு மனிதர் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை சேர்ப்பதற்காக சக்கர நாற்காலியில் ஹாங்காங் வானளாவிய கட்டிடத்தை ஏறி சாதனை புரிந்திருக்கிறார் இந்த மனிதர்.
ஹாங்காங் நகரில் சக்கர நாற்காலியில் வானளாவிய கட்டிடத்தின் 250 மீட்டர் உயரத்தில் ஏறிய முதல் நபர் என்ற பெருமையை லாய் சி-வாய் (Lai Chi-wai) பெற்றார்.
37 வயதான அவர் முதுகெலும்பு நோயாளிகளுக்கு (spinal cord patients) உதவுவதற்காக பணம் திரட்டுவதற்கான கடினமான பணியை மேற்கொண்டிருக்கிறார் லாய் சி-வாய். இவர் இந்த உயரத்தை அடைய 10 மணி நேரம் ஆனது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Also Read | WORLD'S DIRTIEST மனிதன்! 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?
10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார் விபத்தால் (Accident) இடுப்பெழும்பு முறிந்து முடங்கினார் லாய் சி-வாய். 300 மீட்டர் உயரம் கொண்ட உள்ள கவுலூன் தீவீல் (Kowloon peninsula) உள்ள நினா கட்டடத்தின் (Nina Tower) உச்சியில் அவரால் அதைச் செய்ய முடியவில்லை என்றாலும், அவர் கிட்டத்தட்ட உச்சியை அடைந்தார்.
2021 ஜனவரி 16, சீனாவின் (china) ஹாங்காங்கில், 320 மீட்டர் உயரமுள்ள நினா கோபுரத்தை தனது மேல் உடல் வலிமையைப் பயன்படுத்தி ஏற முயற்சிக்கிறார் லாய் சி-வாய். இந்த முயற்சியில், லாய் 250 மீட்டர் (75 / அடி) , அவர் பலத்த காற்றை எதிர்கொண்டார். இது, 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
சி-வாய் $670,639 அளவுக்கு நன்கொடைகளை சேகரித்துக் கொடுத்திருக்கிறார்
"மிகவும் பயந்துவிட்டேன்" என்று லாய் கூறினார். "ஒரு மலையில் ஏறினால், பாறைகள் அல்லது சிறிய துளைகளைப் பிடிக்க முடியும், ஆனால் கண்ணாடி பதித்த கட்டடத்தில் ஏறும்போது, நம்பியது நான் தொங்கிக் கொண்டிருக்கும் கயிறுதான்" என்று லாய் கூறினார்.
2011 க்கு முன்பு, லாய் நான்கு முறை ராக் க்ளைம்பிங் (rock climbing) ஆசிய சாம்பியனாக இருந்தார். ராக் க்ளைம்பிங்கில் உலகளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தார். விபத்துக்குப் பிறகு, லாய் தனது சக்கர நாற்காலியை ஒரு கப்பி அமைப்பில் இணைத்து ஏறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹாங்காங்கின் உள்ளூர் கலாச்சார அடையாளமாக இருக்கும் 495 மீட்டர் உயர லயன் ராக் மலையை அவர் ஏறினார். "வெறுமே வாழ்வதைத் தவிர என்ன செய்வது? என்னைத் தூண்டுவது எது என்றால் இதுதான். சக்கர நாற்காலியில் கூட, மலைகள் ஏற வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த நான் அந்த முயற்சியில் ஈடுபட்டேன்" என்று லாய் கூறினார்.
Also Read | இந்த வீரர்கள் BCCI grade A+ ஒப்பந்தத்தைப் பெறலாம், எவ்வளவு சம்பளம் தெரியுமா?
"ஒரு வகையில், நான் ஒரு ஊனமுற்ற நபர் என்பதை மறந்துவிட்டேன், என்னால் இன்னும் கனவு காண முடிந்தது, விரும்புவதை என்னால் இப்போதும் செய்ய முடியும்", என்று அவர் கூறினார். உடல் குறைபாடுகள் உள்ளவர்களின் போராட்டங்களை லாய் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
"ஊனமுற்றோரின் சிரமங்களை சிலருக்கு புரியவில்லை, நாங்கள் எப்போதும் பலவீனமாக இருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள், எங்களுக்கு உதவி தேவை, எங்களுக்கு உதவி தேவை, எங்களுக்கு மக்கள் பரிதாபம் தேவை" என்று லாய் கூறினார்.
"நான் அனைவரிடமும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், உடல் ஊனம் இருந்தால் அப்படியே இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஊனமுற்ற நபர் பிரகாசிக்க முடிந்தால், ஏதாவது செய்ய முடிந்தால் அதை கண்டிப்பாக செய்யலாம். அவர்கள் வாழ்க்கையில் வாய்ப்பையும், நம்பிக்கையையும், வெளிச்சத்தையும் கொண்டு வர முடியும், அவர்களை பலவீனமானவர்களாக பார்க்க வேண்டியதில்லை" என்று அனைவருக்கும் Lai Chi-wai நம்பிக்கையூட்டுகிறார்.
Also Read | IPL Auction 2021: இந்த விதிகளின் கீழ் வீரர்கள் தனியார் ஏலத்தில் பங்கேற்கலாம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR