Russia vs Ukraine: போரை நிறுத்த நாட்டாமை செய்யும் இந்திய சாமியார்! வீடியோ வைரல்...
உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட இந்திய சாமியார் ஒருவரின் உத்தரவு வீடியோ வைரலாகிறது.
புதுடெல்லி: ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக சமூகத்துடன் இணைந்து இந்தியாவும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது.
"வன்முறையை நிறுத்தவும், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்" இந்தியா அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்தியாவின் சாமியார் ஒருவர் போரை 'நிறுத்த' ஐரோப்பிய நாடுகளுக்கு 'உத்தரவிட்ட' நாட்டாமைத் தனத்திற்காக வைரலாகி (Viral Video) வருகிறார்.
38 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் ஒரு இந்திய சாமியார் “ரஷ்யா கொஞ்சம் அடங்கு, உக்ரைன் மன்னிப்பு கேளு…போரை நிறுத்து! இது எனது உத்தரவு” என்று நாட்டாமையாக மாறி வெளியிட்டுள்ள செல்ஃபி வீடியோ வைரலாகிறது.
மேலும் படிக்க | முகத்தில் புன்னகை பூக்கவைக்கும் மணமக்களின் கியூட் சண்டை: வைரல் வீடியோ
இந்தி சாமியாரின் இந்திய நாட்டாமைத்தனமும் ஹிந்தி மொழியிலேயே இருக்கிறது.
சாமியாரின் உத்தரவின் சாராம்சம் இதுதான்: “ரஷ்யா சக்தி வாய்ந்த நாடு. அது புரியாமல், உக்ரைன் தவறு செய்துவிட்டது... எனவே போரை நிறுத்த , உக்ரைன் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதில் தான் அனைவரின் நன்மையும் இருக்கிறது. பேரழிவைத் தடுக்க ஒரே வழி இதுதான்”.
கௌரவ் சிங் செங்கர் என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 5,200 விருப்பங்களையும், 1200 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.
கடந்த வாரம் உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை அறிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடங்கிய வீடியோவை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் எதிர்கொண்டனர். இங்கே சில எதிர்வினைகளைப் பாருங்கள்:
இதற்கிடையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (எம்சிஏ) வியாழன் அன்று உக்ரைனில் இருந்து சிறப்பு சிவிலியன் விமானங்கள் மூலம் 6,200 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்பியுள்ளதாகவும், ‘ஆபரேஷன் கங்கா’வின் கீழ் அடுத்த இரண்டு நாட்களில் 7,400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | குரங்கு விரித்த வலையில் சிக்கிய புலி; வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR